கைபேசி புரட்சி
Communication Revolution
நீங்கள்
காணும் அதிசயக்காட்சியோடு, என் கண்ணில் பட்டது இன்னொருவர் காலைக்கடனைக்கழிக்கும்
போது முட்காட்டுக்குள் கைபேசியில் பேசிக்கொண்டே கழித்தார். மகிழுந்து,
இருசக்கரமோட்டார் வாகனம் என இயக்கிப்போனாலும் கைபேசியில் பேசிக்கொண்டே
விபத்தை ஏற்படுத்துகின்றனர். கைபேசி இல்லையெனில் அவன் மனிதனாக
மக்கள் மதிப்பதில்லை. பல வரைமுறைகளற்ற தொடர்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஏற்பட்டு பண்பாடு, மற்றும் சமுதாய சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
நல்ல நூல்கள் வாசிப்பு அறுந்து போவது நிதர்சனமாகத்தெரிகிறது.
ஏனெனில் கைபேசியும், இருசக்கரமோட்டார் வாகனம் இருந்தால்
போதும், எங்கு வேண்டுமானாலும் தொடர்பு ஏற்படுத்திப்போகலாம்.கூட நாக்குக்கு மட்டுமே சுவைகூட்டும் துரித உணவு இருந்தால் போதும் என ஆகிப்போன
சமுதாயத்தை என்னவென்பது?
கைபேசி எண் தெரிந்தால் போதும் எதுவும் பரிமாறிக்கொள்ளலாம். ஆபாச வார்த்தைகள், படங்கள், உட்பட. தொலைதொடர்பு புரட்சி நம் தனிமையின் இனிமையை சீர்குலைத்து விட்டது. செய்தித்தொடர்புகளால் மக்கள் மனம் சஞ்சலப்பயணத்தில் உள்ளது. ஓய்வாக மனம், எண்ணம், உடல் இருப்பது சுகமா, இல்லையா? முடிவு உங்கள் கையில்…… உங்கள் கையில் இருக்கும் கைபேசியில் அல்ல……………..
No comments:
Post a Comment