கொம்பன் ஆந்தையுடன் அணில்
நானும்
நண்பர் விஜயகுமாரும் அந்தி வானம் மேற்கில் சிவந்த போது ஒரு பெரிய கல்குழி ஓரம் அமர்ந்து
பறவை நோக்கல் செய்து கொண்டிருந்தோம். Bird race என்பது தவறு.
மோட்டர் வாகனத்தில் துரத்துவதல்ல பறவை நோக்கல். Dr சலிம் அலி நார்ட்டன் மோட்டர் சைக்கிளை தட,தடவென ஓட்டிச்சென்று ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்து தான் பறவை நோக்கல் செய்வார். பறவைகள் பெரிதும் வருகை புரியும் இடத்தில் அமைதியாக இருவர் அமர்ந்து பறவைகளுக்கு
இடையூறு விளைவிக்காமல் தொலைநோக்கியில் இனம் கண்டு ரசிப்பது. 20 பேர் குழு அமைதிக்கு பங்கம் விளைவித்துச்செல்லும் Picnic அல்ல. ஊர்வேலன்காடு சோளக்காடும், முழங்கால் உயரம் வளர்ந்த பொன்னிற புற்களும் கொண்ட புன்செய் காடு. காற்று மட்டும் பேசும். நீலவானம், ஒத்தையடிப்பாதை, மாட்டுவண்டித்தடம், வானத்தை தலை துவட்டும் தென்னை மரங்கள் இதையெல்லாம் ரசிக்கும் போது மக்கள்
Mall-ளில் சுற்றும்போது, மனமகிழ்வை இயற்கை மாதிரி
அள்ளித்தருமா என்பது சந்தேகமே. நிழற் படம் விஜயகுமார்.
ஆந்தையை பயமில்லாமல் ஒரு அணில் சுற்றிச்சுற்றித்திரிந்தது எங்களுக்கு
வேடிக்கையாக இருந்தது. இதுவே ஒரு இரவு நேரமாக இருந்தால் அணிலை
ஆந்தையின் வலிமையான மூக்கு குத்திக்கிழித்திருக்கும். அப்போது
எங்களுக்கு ஒரு குறல் ஞாபகத்துக்கு வந்தது. அது;-
காலம்
அறிதல்.
பகல்
வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு
வேண்டும் பொழுது.-481
அருமையான பதிவு.............,
ReplyDeleteஅன்பர் பவித்ரன்,
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருகை புரியுங்கள்.
-சின்ன சாத்தன்