பல்லுயிரினம்
எனக்குந்தான் தாகமடிக்குது
பல்லுயிரினம்
இருபது வருஷங்களுக்கு முன்பு, நான் மேட்டுக்காட்டில்
வீடு கட்ட ஒரு மனை வாங்கி அகழ்ந்த போது பூச்சி, புழுக்கள், பிள்ளப்பூச்சி, சிறு மூஞ்சூர்,
பாம்பு, உட்பட புலம் பெயர்ந்து போயின. எனக்கு தருமசங்கடமாகப்போயிற்று. அந்த இடம் பருவ
மழைபெய்த காலத்தில் புன்செய் தானியங்கள் விளைந்த பூமி.ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 64 மனைகள்
பிரித்ததில் நான் ஒரு மனை வாங்கினேன். மனிதனாகிய நான் குடியேற, பல உயிரினங்கள் குடிபெயர்ந்தன.
சோகப்பட்ட நான் ஒரு சோகக் கவிதை எழுதி துக்கத்தை குறைத்துக்கொண்டேன். அந்த மேட்டாங்காட்டில்
எண்ணி மூன்று மரங்கள் தான் இருந்தன. பிறகெல்லாம் சூரமுட்புதர்கள் தாம். தனி மனிதன்
குடியேற்றத்துக்கே இந்த பாதிப்பு எனில் நீலகிரி, வால்பாறை, போன்று காடு கொன்று சாயா,
‘ஹாயா’ குடிப்பதற்காக தேயிலைதோட்டம் சமைத்தது, எப்பேற்பட்ட ஈவு இரக்கமற்ற செயல் என
எண்ணிப்பார்க்கிறீரா? நான் 23 வருஷங்களுக்கு முன்பு மேட்டுக்காட்டில் குடியேறிய போதிருந்ததை
விட என்னைச்சுற்றி பல்லுயிரினம் இப்போது அதிகம். அணில், வண்ணத்துப்பூச்சிகள், தும்பியினம்,
பறவையினம், வண்டினம், பூச்சியினம், புழுயினம் பெருகி என்னை மகிழ்ச்சியில் ஆழ்ந்து போக
வைத்துள்ளன. எப்படி? கிட்டத்தட்ட நான் வைத்து வளர்த்த நூறு மரங்கள் ஆற்றும் பணி. 50 வகையான மரங்கள் உள்ளன.
பூக்கள் வர்ஷிப்பு, வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் ஈர்க்கின்றன.பூச்சி, புழுப்பெருக்கம்
பறவைகளை கவர்கின்றன.வலசை வரும் பறவைகள் கூட வருகை புரிகின்றன. விருக்ஷ்சங்கள் தேன்,
மகரந்தம், இலை, வேர், கனி என விருந்தோம்பல் செய்வதால் இப்படிப்பட்ட பல்லுயிர் பெருக்கம்.
அத்துடன் நீர் அருந்த கொள்கலன்கள் வைத்துள்ளேன். உயிரினம் என்னால் தொந்தரவுக்கு உள்ளானதை
இப்படிப்பட்ட செயல் பாட்டில் அந்த 5 எக்கர் பூமியையே சுவர்க்கமாக மாற்றியமைத்தேன்.
நீங்கள் என்ன செய்தீர்கள?
No comments:
Post a Comment