நீலகந்தா (அ) பனங்காடை
Roller Bird
(Coracias benghalensis)
(Coracias benghalensis)
வெட்டவெளி போகும்
மினசாரக்கம்பியில்
தனியாயமர்ந்து தவம்
புரியும் காட்டுக்காடையே!
எப்போதும் உனது
வேட்டை தனியாகவே.
காடுதனில் உலவும்
ஆகாயக்காடையே!
நீ பறந்தால் நீலக்கடல்
விரியும்.
வாய் கருப்பு, தலை
மிகை, உடல் பழுப்பு
கரணமிட்டு தலை
குப்புறப் பாய்வது எதறகு?
நீலச்சிறகு விரித்து
குட்டிக் கரணம் யாருக்கு?
அறிவேன்; எல்லாமேவுன்
காதலிக்குத்தானே!
காதல் கோட்டை பிடிக்க
கோட்டைக்கிளி
வித்தை செயவது பாரக்க
குதூகலம்.
ஆனந்தக் குட்டிக்கரணம்
பெரும் குரலெழப்பி;
வெட்டவெளி விவசாய நிலம்
பிடித்தமானது.
கண்ணில் படும்
பூச்சிகளே உணவாகும்
உழவருக்குப் பேருதவி
உன்னால்! நன்றி நீலகந்தா!
விடமருந்திய சிவன்
கழுத்து நீலம்
அத்துவானக்காடு உலாவும்
நீலக்கண்டனே!
உன்கழுத்தும் நீலமானதால்
நீ நீலகந்தா!
சின்ன சாத்தன்
No comments:
Post a Comment