பள்ளிக்கரணை
சுற்றுச்சூழல்
இது சென்னையை ஒட்டிய சதுப்புநிலப்பகுதி. 3170 எக்டேராக இருந்தது தற்போது 317
எக்டேராக சுருங்கி விட்டது. குப்பையைக்கொட்டியும், ஐடி கம்பெனிகள் கட்டிடம் எழுப்பியும் சாதனை
படைத்து விட்டனர். சதுப்பு நிலம் உயிர் கோளத்தில் முக்கிய பங்காற்றுகிறது.அதை
கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்காமல் மாநகரக்குப்பைகளை மாநகராட்சி கொட்டுவதும், ஐடி
கம்பெனிகள் ஜன்னல் அற்ற கட்டிடம் கட்டி ஏர்கண்டிசனரில் பணியாற்றுவதும் சுற்றுச்சூழல்
எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மனோபாவத்தைக்காட்டுகிறது. தென்அமெரிக்க பறவைகள் Grey headed
Lapwing சென்ற
வலசைப்பருவத்தில் இந்த அழுக்குப்பகுதிக்கு வருகை புரிந்தன. இதோ! அந்தக்குப்பை
மேட்டில் பரிதாபத்துக்குரிய வெளிநாட்டுப்பறவைகள்.
இங்குள்ள ஐடி கம்பெனிகளுக்கு வருகை
புரியும் வெளிநாட்டினர்,’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எனப்பாடிச்செல்வரோ!, இந்தப்பறவைகள் ‘தூதெறி’ என எச்சமிட்டுப் பறந்திருக்கும்.
No comments:
Post a Comment