செந்தொண்டை
கொண்டைக்குருவி (அ) மணிகண்டன்
Rubythroated Bulbul
(Pycnonotus melanicterus
gularis)
இது நமது நாட்டு அழகுப்பறவை.. இப்பறவை சின்னாறு ஆற்றோர மரத்தில்
அமர்ந்திருந்ததை நானும்,நண்பரும் பார்த்தோம். பறவை நோக்குதலுக்குச்செல்லும் நண்பர்கள்
சிறுவாணியில் பார்க்கலாம். தரைக்கு வராது. இந்த இனத்தை மேற்கு தொடர்ச்சி மலைகளின்
ஓரம் பார்க்கலாம். இது நாணப்பட்டு இலைகளில் ஒளிந்து கொள்ளும். புல்புல் கணத்தையும்,
வெள்ளைக்கண்ணையும், ரூபி நிறத்தொண்டையையும் வைத்து இனம் கண்டறியலாம்.
பெர்ரிப்பழங்களையும்,பூச்சிகளையும் உண்ணும். இது நண்பர் விஜயகுமார் எடுத்த படம்.
No comments:
Post a Comment