மயில்
Common Peafowl (Pavo
cristatus)
இருபது நிமிடகோடை மழை
பொழிய
பூமி நனைய என்
உள்ளமும் குளிர்ந்தது.
மழை பெய்யின்
புழுப்பூச்சி வருமே!
வந்தன பறவைகள்! சந்தோச
இரைதேடல்
அதோ! தோகை மயில்
படிக்கட்டு ஏறி வருகுது,
அழகு தேவதை அசைந்து
வருகுது.
கண்கொள்ளாத காட்சி
இதுவல்லவோ!
வர்ண வாண வேடிக்கை
கண்டது போல
நீர்வீழ்ச்சி
குளிர்ச்சி கவர்ந்ததென
யானை பார்த்து வியந்ததொக்க
வைத்த கண் எடுக்க
மனமில்லை.
தோகையிலிருக்கும்
கண்களனைத்தையும் தா!
உன்னைப்பார்த்து
விட்டுத்தருகிறேன்.
மயில் போலொரு
அழகுப்பறவை வேறெதுவுமுண்டோ!
தூண் மறைவில் ஒளிந்து
கொண்டே நின்னை
உறைய வைத்தேன் புகைப்படப்பெட்டியில்-நன்றி!
மயிலுக்கும் மயில்வாகனனுக்கும்
வந்தனம்.
சின்ன சாத்தன்
மழை குருவி நல்ல நல்ல பறவைகளின் தகவல் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து பறவைகளின் உலகை எமக்கு அளிக்க வேண்டுகிறேன் நன்றி.
ReplyDelete
ReplyDeleteThank you Sir. I am also eager to introduce Birds' graceful world.