சின்ன நீல மீன்கொத்தி
Small Blue King Fisher
(Alcedo atthis)
காலைப்பொழுதில் பறவை கண்காணிப்பில் இருந்த போது, பெரும் மழை பெய்ய, ஆங்காங்கு
பள்ளங்கள் நிறைந்தன. ஒரு சின்ன நீர் நிலையை ஒட்டி நடந்து போனேன்.அப்போது ஒரு சின்ன
நீலமீன்கொத்தி ‘ச்சிச்சீ’ ‘ச்சிச்சீ’ எனக்கத்திக்கொண்டே அந்த நீர்நிலைக்கு மேலே மண் சுவற்றின் ஒரு துவாரத்தில்
போவதும் வருவதுமாக இருந்தது. அதன் நடவடிக்கையை குடையைப்பிடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன் பரிதவிப்பு புரிந்து போயிற்று. அந்த மண்தடுப்பு
சுவர் துவாரத்துள்ளே முட்டைகள் இருக்கும். பள்ளத்தில் நீர்மட்டம் வேறு உயர்ந்து
கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சநேரத்தில் நீர்மட்டம் உயர்ந்து,கூட்டு துவாரம் உள்ளே நீர் புகுந்து விடும்.முட்டைகள் நீரில் மிதந்து வெளிவந்து
சேதமடைந்துவிடும்.
என்ன செய்யாலாம்? நண்பனின்
பக்கத்து தோட்டத்துச்சாலைக்கு சென்றேன். சாலைக்குள் இருந்த மண்வெட்டியை எடுத்து
வந்தேன.குடையை மரக்கிளையில் தொங்கவிட்டேன்.சரிவான இடத்தில் பொத்து விட்டால்
பள்ளத்தின் நீர்மட்டம் உயராது. ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து பொத்துவிட
ஆரம்பித்தேன். மழையில் வேலை செய்வது கடினமாக இருந்தது. பத்து நிமிட உழைப்புக்குப்பிறகு
நீர் ‘தப,தப’ என விழ, நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது.இனி மீன்கொத்தி தவிக்க வேண்டாம். எனது
தவிப்பும் அகன்றது. மீனகொத்தி புரிந்து கொண்டு அமைதியாக ஒரு கொம்பிலமர்ந்தது.
No comments:
Post a Comment