Wednesday, September 11, 2013



 Wild life in Residential area




பெரிய மரப்பல்லி
 Wild life in Residential area
Tree Lizard
            ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய பல்லி வயிற்றிலிருந்து 6-7 முட்டைகள் சிதறிப்போய் பின் பாதி உடல் இல்லாமல் கடிக்கப்பட்டுக்கிடந்தது. அந்தோ! முட்டைகள் வெள்ளையாகவும், ஓவல் வடிவத்திலும் ரப்பர் போல வெளி ஓடும் இருந்தது. வயிற்றில் ஒரு முட்டை வெளியில் வராமல் இருந்தது. பரிதாபம். எத்தனை ஜீவன்கள் மடிந்து போயின!  10-20 முட்டைகள் இடும் இந்தப்பல்லி இனம், முட்டைகளை ஈரமண்ணில் புதைத்து வைக்கும். 7 வாரத்தில் குஞ்சு பொரிக்கும்.
            இவற்றிற்கு இரை பூச்சிகள், சின்ன ஊர்வன போன்றவை. பற்கள் இரையைப்பற்ற மட்டுமே முடியும். கிழிக்கவோ, அரைக்கவோ முடியாது. இரையை அப்படியே விழுங்கும்இனப்பெருக்க காலத்தில் தலை சிகப்பாக மாறும்.காதல் காலத்தில் வில்லனாக மற்றொரு பல்லி வந்தால் சண்டை மூழும்.
            எங்கள் காலனியில் பூனைகள் கொஞ்சம் அதிகம். யாரும் வளர்த்துவதில்லை. இருப்பினும் இவை குட்டிகளிட்டு தங்களுக்குள் ஒவ்வொரு வீட்டைதேர்ந்தெடுத்துக்கொண்டு கொல்லைப்புறம், முற்றம், தோட்டம் என உலவி கிடைப்பது உண்டு வாழும். எங்கள் வீட்டில் சுற்றித்திரியும் ஒரு பூனை பெரிய மரப்பல்லியை இரவில் வேட்டையாடிவிட்டது. மரப்பல்லி வாயும் வயுறுமாக பூனையிடம் அகப்பட்டது பரிதாபமாக இருந்தது.

        எனது வீட்டைச்சுற்றி கற்பகவிருக்ஷங்களாய் மரங்களை நூற்றுக்கனக்கில் நான் வளர்த்ததால் தான் ஒரு குடியிருப்புப்பகுதியில் என்னைச்சுற்றிஇப்படிப்பட்ட சுவராஸ்யங்கள் நடந்தேறுகின்றன. உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மரங்கள், வண்ணத்துப்பூச்சிகள், ஊர்வன, பறவைகள், பூச்சிகள் , வண்டுகள் என உயிர்ப்பான காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவரும்.

No comments:

Post a Comment