இசை
இசை
கேட்டு நீ சிலிர்க்கவில்லையே!
கண்ணனின்
மயிலிறகுகூட சிலிர்க்கையில்;
இசையால்
கண்கள் கசியவில்லையே!
இசை
கல்லையும் கரைக்கையில்;
வயலின்
நரம்பு உன் நரம்பைமீட்டியும்
இதயம்
உருகவில்லையே!
இசையில்
மயில்தோகையும் சிலிர்க்கையில்
நீ
நெகிழ வில்லையே!
காற்றும்
நின்று கேட்கையில்
மானும்
காதசைக்கையில்
உன்
மயிற்கால்கள் சிலிர்க்கலையா?
கொன்றைப்பூக்கள்
தலையசைக்க
கலைந்த
மேகம் கூடி நிற்க
இசை
உன்னை உருக்கவில்லையா?
இசையில்
மழை சிணுங்க, காளான்களும் விடைக்க
நீ
தலையசைக்காது போனது விசித்திரமே!
இசை, துளிகள் வழி
ஊடுருவி இசைத்திட
மேற்கே
ஏழுநிற வானவில் ரசிக்கலையா?
வானவில்
ஏழிசை கணநேரத்தில் மறையுமே
இன்னுமா
பரவசக்குமிழ்கள் கிளம்பவில்லை
இனி இந்த இசைமழை உனக்காக காத்திருக்காது.---சின்ன சாத்தன்
ஓவியர், மற்றும் படக்கலைஞர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் சமர்ப்பணம்
No comments:
Post a Comment