Roller Bird sun bathing at Oorvelankaadu, Sulur |
Anting Eagle sp.(Photo published in Diary on the nesting behaviour of Indian Birds) |
Bathing Jungle Myna at Munnar |
Dust bathing Little Ringed Plover-thanks to bloger |
பறவைகளும் நம்மைப்போல குளியலிடும்
அதுமட்டுமா? தூசிக்குளியல், எறும்புக்குளியல், சூரியக்குளியல்என ஈடுபடும்.
குளியல்
பறவைகளின்
பாதி நேரம் இறகு கோதுவதிலேயே கழியும். நமக்கு முடி அதிகம் இருந்தால் ஈர், பேன் வருவது
போல அவைகளுக்கு உண்ணிகள் வரும். அவைகளை ஒரு கட்டுக்குள் வைக்க குளியலிடும். பிறகு இறகு
கோதும். ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொரு விதமாகக் குளியலிடும். கரிச்சான்(Black
Drango) நீர்ப்பரப்பைத்தொட்டும் தொடாமலும் பறந்து தன்னை ஈரப்படுத்திக்கொண்டு இறகு கோத,
தாவர சிமிறில் அமரும். புள்ளிமூக்கு வாத்து நீரில் கரை ஒதுங்கி, அலகால் குளநீரை எடுத்து
உடம்பின் மீது சில முறை விட்டு,இறகைக்கோதும்.
தூசிக்குளியல்
மண்
இலகுவாகவும், தூசியுடனும் இருந்தால் பல முறை அசைந்து சிறு குழிவு ஏற்படுத்தி தூசி மண்ணுக்குள்
கடையும். சிட்டுக்குருவி(House Sparrow) தூசிக்குளியல் பார்த்திருக்கீறீர்களா? இதே
முறை தான்! (சிட்டுக்குருவியே பார்க்க முடிவதில்லை-இதில் தூசிக்குளியல் எங்கே பார்ப்பது?)
கொண்டலாத்தி(Hoopoe) குளியல் உடற்பயிற்சியில் தண்டால் எடுப்பது போலவும், பக்கவாட்டிலும்
உருளும். இன்னும் கிராமத்தினர் களிமண்ணை உடலில் பூசி குளியல் போடுகின்றனர்.
எறும்புக்குளியல்
எறும்புகளின்
ஃபார்மிக் அமிலம்(Formic acid) உண்ணியை நீக்க வல்லதா! எனத்தெரியவில்லை. அல்லது எறும்பு
ஊர்தலும், கடியும் உண்ணிக்கடியில் பறவைக்கு இதமாக உள்ளதா என நினைக்கத்தோன்றுகிறது.
பறவையினத்தில் மாடப்புறா(Pigeon), பனங்காடை(Roller Bird) , கழுகு(Eagle sp.) என்பவை
எறும்புப்புத்துக்கருகில் அமர்ந்து கொள்ளும். சில இனம் எறும்புகளை எடுத்து ஒவ்வொன்றாக
தன் உடம்பின் மீது விடும். பிறகு கடி வாங்கிக்கொண்டு, எறும்பை எடுத்துக்கீழே விடும்.எறும்புக்குளியல்
நம்மால் ஆகாதுடா! சாமி!
சூரியக்குளியல்
ஆண்
குயில்(Koel) எனது குடியிருப்புப்பகுதியில் உள்ள தென்னைமரக்கிளையின் மேற்புறம் ஏறு
வெய்யிலின் போது சில சமயம் அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்துக்கொள்ளும். பெண் குயிலைப்பார்த்தால்
அருவி மரம் (Fountain tree) கிளையின் மீது,காலை ஏறு வெய்யிலில் படுத்துக்கொள்ளும்.
புறாக்கள்,பனங்காடை வெய்யிலில் அமர்ந்திருக்கும். நீர்க்காகங்கள்(Cormorants)நீரில் மூழ்கி,
மூழ்கி இரை தேடி ஈரமாய்ப்போன இறகை உலர்த்த இறகை விரித்து வெய்யில் காயும். நீங்கள்
மட்டுமா sun bath எடுப்பீர், நாங்களும் எடுக்கிறோமே! என்கின்றன பறவைகள்.
No comments:
Post a Comment