மஞ்சள் அரளிப்பூவை மழை குளியலுடும் போது எடுத்த நிழற்படமிது
வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சி
Southern Birdwing
(Troides minos)
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
எப்போது நாம் தமிழில் பெயர் சூட்டப்போகிறோம்? இதற்கு தெற்கத்திய பறவைஇறகு என நான் பெயர்சூட்டி அழகு பார்க்கிறேன். இது மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமை
மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், புதர்கள்,
விவசாயநிலம் எனப் பார்க்கலாம் என ஐசக் கெஹிம்கர் நூலில் (The
Book of Indian Butterflies) குறிப்பிட்டிருக்கிறார். அதிகாலைப்பொழுதில் சுறுசுறுப்பாக மரங்களின் உயரத்தில் தேன் பருகப்பறக்கும்.
Endemic –மக்கள் காடுகளை சூறையாடி இவற்றைப்பெருகவிடாமல் செய்துவிட்டனர்.
பருவமழைக்குப்பின்னும், முன்னும் பார்க்கலாம்.
வருஷம் முழுதும் பார்க்கவும் முடியும். இதை நான்
14.09.13(புதன்) அன்று எனது எசு.வி.எல் காலனி, சூலூரில் பார்த்தேன். இதற்கு முன்னும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். பார்த்த
போது காலை 10.15-நல்ல வெய்யில். ஆண் வண்ணத்துப்பூச்சி
மஞ்சள் அரளிப்பூ புதர் செடியின் 15 அடி உயரத்தில் பூத்திருந்த மஞ்சள் பூவில்
தேன் உறிஞ்சிய அழகைப் பார்க்க இந்த இரண்டு கண்கள் போதுமானதாக இல்லை..
இந்தியாவின் பெரிய வண்ணத்துப்பூச்சி(பெண்)
இது தான். பெண்ணைவிட ஆண் வண்ணத்துப்பூச்சியை அதிகம்
பார்க்கலாம். பெண்ணில் மஞ்சள் கீழ் இறகில் மேற்புறம் கரும் புள்ளிகள்
இருக்கும்.
ஆணுக்கு மேற்புற கீழ் இறகில்
தங்க மஞ்சள் நிறம் இருபுறம் இருக்கும்.
பிறகு வெல்வட் கருப்பு அதற்குப்பின் இருக்கும். மஞ்சள் இறகு வண்ணத்துப்பூச்சி பார்க்க அட! அடா!!
மஞ்சள் அரளிப்பூவே காற்றில் மிதப்பது போல் இருந்தது. காடுகளில் சுற்றித்திரியும் தெற்கத்திய பறவைஇறகு எமது பகுதிக்கு வந்தது அபூர்வம்.
திடீரென தாழப்பறந்து மறைந்து விட்டது. இவை உணவுத்தாவரங்களான
Aristolochia indica, Aristolochia tagala, Thottea siliquosa சுற்றியே
தங்கள் வாழ்வை அமைக்கும். நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் வீடு
கோவைப்புதூர். அங்கு வண்ணத்துப்பூச்சிக்காகவே
Aristolochia indica வளர்த்துள்ளார். அதில் Southern
Birdwing முட்டை வைத்து, புழுவாகி, கூட்டுப்புழுவாகி வண்ணமயமான இறகைவிரித்து பறக்கும் வனப்பில் பரவசப்பட்டவர்களுக்குத்தான்
நான் சொல்லும் அருமை புரியும். மூர்த்தி சார் கனணி கோப்பில், அவர் எடுத்த 130
வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அதிலிருந்து எடுத்து இங்கு தந்துள்ளேன்.
நன்றி மூர்த்தி சார்.
No comments:
Post a Comment