Tuesday, May 21, 2013
















Bulbul hillocks
மஞ்சள் கழுத்து சின்னான்               
Yellowthroated Bulbul
(Pycnonotus xantholaemus)

            இந்தப்பறவை சின்னானை இது வரை சந்தித்ததில்லை. ஆனால் மனிதச்சின்னானை சந்தித்திருக்கிறேன். இந்தப்பறவையை மூன்று முட்காட்டுமலைகளில் சந்தித்தாயிற்று. கொண்டைக்குருவிகளும் சின்னான்களும் (Bulbuls) கோவையைச்சுற்றிய பொன்னூத்து, தர்மலிங்கர்மலை, அனுவாவி எனும் மூன்று மலைகளிலும் காணக்கிடைக்கின்றன.மருதமலையில் இருக்கும், ஆயின் கண்ணிலாடவில்லை. Redvented Bulbul, Redwhiskered Bulbul, Whitebrowed Bulbul, Yellowthroated Bulbul இவை நான்கும் உலாவித்திரிவதை ரசிக்கலாம். ‘மேரி புல்புல்எனக்கொஞ்சலாம். முதலில் சொன்ன மூன்று பறவைகள் பார்த்து ரசித்தவை. மஞ்சள் கழுத்து சின்னான் இத்தனை நாள் கண்ணில் பாடாததால் கொஞ்ச முடியவில்லை. இது நாணம் கொண்டதால் பார்க்கமுடியவில்லை போலும். R- Resident-பறவை. பெர்ரிப்பழங்கள், பூச்சிகள் உணவாயிப்போயின. Dr.சலிம் அலி பதிவுப்படி இந்தப்பகுதியில் இல்லாததை வெளிக்கொணர்ந்த CNS, கோவைக்கு பாராட்டுகள்.
            அவர்கள் சொன்ன பொன்னூத்தம்மன் குன்றில் மட்டுமல்ல, அனுவாவி, தர்மலிங்கர் மலையிலும் உலவித்திரிகின்றன. இது இத்தனை நாள் காட்சிகொடுக்காததுஏனென்று பார்த்தால் இவை உள் வலசைப்பறவையாக இருக்கலாம். Dispersal, Irruption என்ற காரணத்தால் கூட இந்தப்பிராந்தியத்திற்கு வந்திருக்கலாம். இப்போது இந்த முட்காட்டுமலைக்கு வந்திருப்பதால் தென்மேற்குப்பருவமழை ஒட்டி கூடு வைக்கக்கூடும். Dr. சலிம்அலி சொல்கிறார், ‘ A confirmed skulker shy and restless”
என்னைப்பார்த்து என்ன வெட்கம் மேரி புல்புல்?


பறவை நோக்கர் தமாஷ்

மகன்; அப்பா எங்கம்மா?

அம்மா;  பைனாகுலர் ரிப்பேர் ஆயிடுத்து. கோழிக்கடைக்குப்போயிருக்கார்.

மகன்;  அங்கல்லாம்  போலாமோன்னோ  நாம?

அம்மா;  அங்க, காடை, கவுதாரி கூண்டுல இருக்குமோன்னோ அத பேர்ட்வாட்ச்பண்ணிட்டு வருவார்.

மைனாக்களை வரைந்தது நணபர் முழுமதி
கொக்கிறகர்   
 யார்? 
Who am I ? 

Sunday, May 19, 2013

Singer Mr. Magpie Robin

என்ன அழகு!
மனிதன் எனக்குத்தந்த நீரைப்பாரீர்
 இரை தேட கத்துக்காம எங்க வடக்க போறே!












மணியோசை














சரிகமபதநிச- ஆரோகனம்--சநிதபமகரிச-அவரோகனம்


Wednesday, May 15, 2013

பயணம் முடிந்த கதை

Swarm of Passenger Pigeon 
Passenger Pigeon









Nesting
              Migration day   
       
                                
Cemetery
          11.05.2013

Passenger Pigeon (Ectopistes migratorius)

பயணிப்புறாக்கள் மரித்த கதை

நான் பிறப்பதற்கு முன்னமே இந்த பயணிப்புறாக்களை ஒரே அடியாக மனிதன் தின்று தீர்த்து விட்டான். லட்சக்கணக்காக ஒரு பேரலை போல் வலசை போகும் போது சகட்டுமேனிக்கு வேட்டையாடி தின்றும், விற்றும் ஏப்பம் விட்டு விட்டான். செப்-1-1914 மார்த்தி என செல்லப்பெயர் வைத்த கடைசி பயணிப்புறா சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் உயிர் விட்டது. இது வட அமெரிக்கப்பறவை. இது வட அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி முழுதும் வலசையிலேயே இருக்கும். இதன் அபரிமிதமான எண்ணிக்கையாலேயே இதன் சந்ததி சுவடு தெரியாமல் போய்விட்டது. அழகான பறவை. இது ஒரு வலசையின் போது, 1886 –ல் தெற்கு ஒன்டோரியாவை அந்த புறா பெரும் கும்பல்(வெள்ளம்!) கடக்க 14 மணி நேரம் ஆயிற்றாம். 1.5 km அகலம் 500 km நீளம் என்றால் நினைத்துப்பாருங்கள்! அடேங்கப்பா! நமது பேராசை மக்கள் கண்ணைமூடிக்கொண்டு நாட்டுத்துப்பாக்கி, கல், வலை, தடி எனப்பயன்படுத்தி லட்சக்கணக்கில் வீழ்த்தி உள்நாட்டு வியாபாரம், ஏற்றுமதி என்று வியாபார நிறுவனங்கள் அமைத்து இந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டனர். இதன் விஞ்ஞானப்பெயரில் migratorius இருப்பதும், பொதுப்பெயரில் passenger என்று இருப்பதும் இது பயணித்துக்கொண்டே இருக்கும் பறவை என புலப்படுகிறது.
            இது மணிக்கு 100 கிமி வேகத்தில் பறந்து செல்லும். Nomadic. தனக்கு என்று ஒரு இடத்தில் இல்லாது இரவுத்தங்கல், கூடு வைக்கும் இடம், என எதுவும் இடம் மாறிக்கொண்டிருக்கும்.உயர் மரங்களில்ஒன்றின் மேல் ஒன்றாகக்கூட தங்க, சிலசமயம் பெரிய கிளைகூட உடைந்துவிடும். அலகை மார்பில் புதைத்துக்கொண்டு தூங்கும். கால்கள் மறைத்துக்கொள்ளும். ஒரு இரவு தங்கிய மகா கும்பலின் புறாக்களுக்குக்கீழே ஒரு அடிக்கு மேல் அதன் கழிவுகள்(Excreta) குவிந்திருக்கும். இந்தப்புறா 15 வயது வரை வாழும். ஆனால் மார்த்தா இறக்கும் போது 17 இருக்கும். இவை ஆக்ரான், வெள்ளை ஓக்குகளைத்தின்று வடஅமெரிக்காவில் காடுகளைப்பரப்பி இருக்கிறது.இரை தேடி ஒரு நாளைக்கு 160 கிமி கூடப்போகும். Phtilopterid louse, Columbicola extinctus, என்ற இரு பறவைகள் தங்கள் முட்டைகளுக்குகூடு கட்டாமல் பயணிப்புறாவை நம்பியிருக்க, இவைகளும் பயணிப்புறாவோடு அழிந்து பட்டன. அந்தோ!
            வரதட்சனைக்காக 4000 பயணிப்புறாக்கள் கொல்லப்பட்டு அதன் இறகுகளால் ஆன மெத்தை, தலையணை கல்யாணத்தம்பதிக்கு பரிசளிப்பு நடத்தினர். தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கண்கோளாறு ஆகியவற்றிற்கு பயணிப்புறாக்களின் குருதியையும், சதையையும் குடித்தும், தின்றும் இருந்த மக்களை என்னவென்பது? அப்போதிருந்த காட்டுமிராண்டித்தனத்தை நினைத்து மிரள வேண்டியுள்ளது. கூடுகளைக்கூட விட்டுவைக்காமல், உயரமான கூடுகளை பெரிய தடி கொண்டு தட்டிக்களைத்தும், மரத்துக்கே தீவைத்தும், மரத்தையே வெட்டியும், அம்பில் எய்தும் கூடுகளிலிருந்து குஞ்சுகளை தீயில் வாட்டித்தின்றிருக்கின்றனர். பொம்மை பயணிப்புறா, கந்தகப்புகை, உப்பு, சாராயம்கலந்த தானியம் என பயணிப்புறாக்களை ஏமாற்றி வதை செய்திருக்கிறார்கள். தாளப்பறக்கும் ஆயிரக்கணக்கான பறவைகளை தடியாலும், கற்களாலும் சம்ஹாரம் செய்திருக்கின்றனர். ஒரு குகை போன்று போகும் வலையில் 3500 பயணிப்புறாக்களைக்கூட பிடித்து விட்ட பராக்கிரமசாலிகள். துப்பாக்கிகள்பேசின. குழிகளில் நிரப்பப்பட்ட தானியம் புறாக்களுக்கு புதைகுழியாகிப்போனது. ஒரு வேட்டைக்காரன் தனது வாழ்நாளில் 3 மில்லியன் புறாக்களை கிழக்கு நாடுகளுக்கு வாணிபம் செய்து பெரும் செல்வந்தர் ஆகிவிட்டானாம். சிறுவர்களுக்கு புறாவேட்டை விளையாட்டும், காசுமாகிப்போனது. ஒரு டஜன் புறா 31to56 சென்ட் விலையானது. வியாபாரம் செழிக்க, பயணப்புறாக்கள் கோடிக்கணக்கில் மரித்தன.வை உலகைவிட்டே மறைந்தொழிந்தன. மனிதனை மாதிரி குரூரம் இவ்வுலகில் வேறு எந்த ஜீவனிலும் இல்லை. பயணிப்புறாவைப்பற்றி எழுதியிருக்கின்றனர். படியுங்கள். இனிமேல் இது தவிர்க்கப்பட வேண்டும் என முடிவெடுங்கள்.

ஜான் ஹெரால்ட் ஒரு பாடலை மார்த்தாவுக்கு சமர்ப்பித்து முராரி பாடியுள்ளார். அதற்கு மார்த்தா-கடைசி பயணிப்புறாக்கள்எனப்பெயர். Lyrics to "Martha (Last of the Passenger Pigeons)"

 TThan *      
 
 
Oh high above the trees and the reeds like rainbows
they landed soft as moon glow
in greens and reds they fluttered past the windows
ah but nobody cared or saw
 
till the hungry came in crowds
with their guns and dozers
and soon the peace was over
God what were they thinking of?
 
   Oh on and on till dreams come true
   you know a piece of us all goes with you
 
Oh the birds went down
they fell and they faded to the dozens
Till in a Cincinnati Zoo was the last one
 
Yes all that remained was the last
with a name of Martha
Very proud, very sad, but very wise
 
Oh as the lines filed by there were few who cared
or could be bothered
how could anyone have treated you harder
and it was all for a dollar or more
 
   Oh on and on till dreams come true
   you know a piece of us all goes with you
 
Oh and surrounded there by some of whom wept around her
in a corner of the cage they found her
she went as soft as she came so shy till the last song
oh the passenger pigeon was gone...


Thanks to those who are provide information to my blog thro' Net. It is not used for any commercial purpose and intention is to induce blog visitors to conserve Birds in near future.

Sunday, May 12, 2013


Soaring
பறவைகள் வெப்ப தாளியில் உயரே மிதத்தல்


Soaring of SpottedBilled Pelican

          Soaring என்றால்வெப்பத்தில் மேலே தாளி போல் கிளம்பும் காற்றில்உயர, உயரே வானில் கிட்டத்தட்ட வட்ட மாக குழுவாகபறவைகள் மிதத்தல்.உஷ்…அப்பாடா! ஒரு ஆங்கில சொல்லைப்புரிய வைக்க இவ்வளவு சொற்களைப்பிரயோகிக்க வேண்டியது உள்ளது. தமிழில் இதற்கு சரியான சொல் இருந்தால் தெரிவிக்கலாம். இதில் செவ்வரி நாரைகள்(Painted Stork), கூழைக்கடாக்கள்(Grey Pelican),கரும்பருந்துகள் (Black kite) குழுவாகப்பறக்கும். இது காலையிலிருந்து மாலைக்குள் நிகழுகிறது. பார்க்கக்கண்கொள்ளாத காட்சியாக இருக்கும். கூழைக்கடாக்கள், செவ்வரி நாரைகள் இரண்டும் காலை 9 மணிக்கு மேல் மாலை 5 மணிக்குள வேய்யில் நேரத்தில் காற்று லேசாகி மேலே செல்லும் போது இப்பறவைகள் காற்றைப்பயன்படுத்தி உயர உயரப்போய் வெப்பத்தாளியில் மிதந்தவாறு வட்டமடிக்கின்றன.  உண்ட (கிலோகணக்கில்)மீன்கள் செரிக்க இப்படிச்செய்கிறதா? நீல வானில் இப்படி Tunnel வடிவில் மிதப்பதுஎதற்காம்? தாள்வாக Gliding செய்யும் பறவைகள் முதலில் இறக்கை அசைத்து, மேலிருந்து தாளவந்து மிதப்பது இரைக்காக எனலாம். Gliding செய்தால் பறவை தாள வந்து மிதக்கும். ‘சோரிங்’ செய்வது இரைபிடிக்க அல்ல. ‘சோரிங்’ –கில் மேலே மேலே வெப்ப தாளியின் ஒவ்வொரு மிண்ணனுவிலும் பறவைகள் ஏறி சுவர்க்கத்தில் புள்ளிகளாகி விடுகின்றன, என Dr.சலிம்அலி வியக்கிறார். ‘சோரிங்செய்வது இறக்கைக்கு பலம் சேர்க்கிறதா?. குறும்புத்தன விளையாட்டா? மாடப்புறாக்கள் காலையில் குழுவாக வேகமாகப்பறப்பதுஒரு வகை warm up. அப்படிப்பறக்கும் போது வரும் ஒலியை ரசித்திருக்கிறீர்களா? அந்தப்பறத்தல் இரைதேடி அல்ல.’சோரிங்’ வெய்யில் பொழுது லேசான காற்றை தனக்கு சாதகமாகப்பயன்படுத்தி மிதப்பதை இயற்கை கற்றுக்கொடுத்துள்ளது.

          கரும்பருந்து பெரும்பாலும் மழைவருமோ என நினைக்கவைக்கும் வானம், கருமையாக இருக்கும் போது, கூட்டமாகசோரிங்செய்கிறது. இதை எத்தனை நாட்கள் ஐந்தாவது மாடி அலுவலகத்திலிருந்து ரசித்திருக்கிறேன்? மழைவருமோ எனும் போதில் காற்று லேசாகாது. காற்று கணக்கும். இதில் கூட கரும்பருந்துகள் சோரிங் செய்கின்றன. கூந்தகுளம், சிங்கை குளம் இவற்றின் ஏரிமேட்டில் நின்று செவ்வரி நாரைகள், கூழைக்கடாக்கள்’சோரிங்’ செய்யும் அழகை ரசித்தும்பிரம்மித்தும் இருக்கிறேன்.அதெப்படி விழாவில்  கலந்து கொள்வது போல பறவைகள் சோரிங்கில் சேர்கின்றன? பறவைகளின் அடிப்பகுதி தெரிய புதிய கோணத்தில் பார்ப்பது வனப்போ வனப்பு! வெப்ப நாடாக இருத்தல் வேண்டும். கடலுக்கு மேல் இந்த சோரிங் சாத்தியமில்லை. ஏனெனில் வெப்பதாளி அதன் மேல் உருவாகாது. சோரிங் செய்ய பறவைகளுக்கு பரந்த, வட்டமான,சதுரமான, இறகு ஓரங்களில் விரல்கள் போல அமைப்பு தேவை.


பச்சோந்தி பற்றி விரைவில்

Identify me?













Recognize  சென்ற Blog கேள்விக்கு விடை;         
Redwhiskered BulBul

Bird watch Jokes

தோழி;  உன் கணவர் தூங்கறதுக்கு முதல்ல புத்தகம் படிச்சா தூக்கம் வருமா? TV பாத்தா வருமா?
 கீதா;    அவருக்கு பறவை சப்தத்தை CD-ல கேட்டாத்தான் தூக்கம் வரும். அவர்  Bird watcher-
                        



Thursday, May 9, 2013









Recognize?
(Answer in next Blog)


சோகப்பாடகன்
Indian Plaintive Cuckoo
(Cacomantis passerines)



குக்கு இனப்பறவைகள் பெறும்பாலும் பாடக்கூடியவை. அதனால் இவைகளைத்தமிழில் பெயர்  வைக்கும் போது குயில் என்றே வழங்குகிறோம். Pied crested cuckoo-ற்கு சுடலைக்குயில் என்கிறோம். இது நமது பகுதிக்கு வந்து பாடினால் சில நாட்களில் மழை வரும் என்கின்றனர். இதற்கு மேடையும் ஒலிபெருக்கியும் அமைத்துக்கொடுக்கலாமா? Indian Plaintive Cuckoo-வை சிறுகுயில் எனச்சொல்கின்றனர். அதுவும் சோகப்பாட்டு! அதன் பெயரிலேயே தெரியுது சோகம்.இது பி-பி-பிப்பி-பிப்பீ-பிப்பி-பிப்பீ ஏன நமக்கு கேட்கும்படி தெரியும் மரத்தின் உயரக்கிளையில் அமர்ந்து பாடும். இது கூடுகட்ட சோம்பேரித்தனப்பட்டு கதிர்குருவி (Warbler) இனப்பறவைகளை செவிலித்தாய்களாக்கி, அவற்றின் கூட்டில் முட்டைகளை கள்ளத்தனமாக இட்டு விட்டு, ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் கதிர்குருவி வளர்த்தாலும், என்னைப்போலவே இருப்பான்எனப்பாடித்திரியும் போலிருக்கிறது.
           
இதனை முதலில் Blue Rock Thrush என நினைத்து ஏமாந்தேன். பறவைகளை இனம் காண்பது மூளைக்கு வேலை. அது ஒரு மர்மத்தினை விடுவிப்பது. ரகசியத்தை வெளிக்கொணர்வது. ‘த்ரில்ஆனது. பறவையிடம் போய் ID please? என்றால் அது சொல்லுமா? நாம் தான் நமது வசதிக்காக பிரித்து வைத்துள்ளோம். அதனால் நாம் தான் கண்டுபிடிக்கவேண்டும். இப்பறவையின் நீல நிறம், பார்த்த இடம் மலை அடிவார பாறை இடம், மேலும் வாலில் வெண்தீற்றல், கோடுகள் இல்லாததால், இது Blue Rock Thrush(நீலப்பூங்குருவி) என எண்ணவைத்தது. அதற்குப்பிறகு, கண்கள் சிவந்துள்ளது, வாலும் அடி வயிறும் சேறும் (vent)  இடம் வெள்ளை. வாலில் மெலிதாகத்தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் zoom செய்து பார்த்ததில் அதுவும் சன்னமாகத்தெரிகிறது.பாடும் போது நாம் கை அசைப்பது போல இது இறக்கையையும், வாலையும் தளர்வாகத்தொங்க விடும். அது பழக்க தோசத்தால் நாங்கள் பார்த்த போது, அதாவது பாடாத போதும் அப்படி அமர்ந்தது. (வலது படத்தில் காண்க.) மேலும் குக்கு இனப்பறவைகளுக்கு கண்களை சிகப்பாக்கி அந்த கள்ளத்தனத்தை இயற்கை வெளிக்காட்டுகிறது. Eg: Coucal, Koel, Sirkeer Cuckoo,  etc. திருடன் கண்கள் போல் குக்கு இனப்பறவைகளின் கண்கள் வித்தியாசமாகத்தெரிகின்றன. Cuckoo- பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. Identification of Birds is an interesting art and if we solve that mystery, we will get immense joy atleast for another few days.  

Left side still taken by my friend R. Vijayakumar 

Joke
 கணவன்;(மனைவியடம்) Bird watch போயிட்டு வர்ரேன்.

மனைவி; cooling glass வேணுமா?

NB: Blog visitors are requested to spread our Blog ID to your chums.

Monday, May 6, 2013


Koel(F)
Small GreenBilled Malkoha
Coucal






Pied crested Cuckoo
இனப்பறவைகளின் வாடகைத்தாய்கள்    

Cuckoo Birds
          கூடு கட்டாமல் தன் சந்ததியைப்பெருக்க, அடுத்தவர் தயவில் வாழும் பறவைகள் இந்த குக்கு இனப்பறவைகள். பல ஆயிரம் வருஷங்களாக கூடுகட்டுவது எப்படி எனக்கற்றுக்கொள்ளவில்லை. ஆர்வமும் அக்கரையும் இல்லை. மனிதன் சிலரைப்பயன் படுத்திக் கொள்வது போல், பயன்படுத்தியதற்கு பிரதி உபகாரமாக எதையும் செய்யாததுபோல,ஒரு வேளை பறவைகளும் அடுத்த இனப்பறவையை பயன்படுத்திக்கொள்கிறதாகுக்கு பறவைகள் காகம், சிலம்பன் கூட்டில் அத்துமீறிப்புகுந்து, தன் முட்டையை வைப்பதோடல்லாமல்,அந்தக்கூட்டில் இருக்கும்           முட்டையைத்தள்ளி விடுவது எந்த வகையில் நியாயம்.? குக்கு இனப்பறவைகளுக்கு சோம்பேறித்தனம் மேலோங்கியுள்ளதா? குக்கு இனப்பறவைகள் எல்லாம் கூடு கட்டுவதில்லை எனச்சொல்லமுடியாது. இவைகளில் செண்பகம்(Coucal), பச்சைவாயன்(Malkoha) கூடுகட்டுகின்றன. அடுத்தவரை ஏமாற்றுவதில்லை. தன் சொந்தக்காலில் நிற்கின்றன. குயில்(Koel),சுடலைக்குயில்(Pied Crested Cuckoo) முறையே காகம் (House Crow) வெண்தலைச்சிலம்பன்  (White Headed Babbler)-களை ஏமாற்றிப்பிழைக்கின்றன.

          கூடு கட்ட மெனக்கெடவேண்டியதில்லை. அடைகாக்கவேண்டியதில்லை. குஞ்சுகள் பொரித்தபிறகு உணவு தேடி ஊட்டி வளர்க்கத்தேவையில்லை. சற்றுபெரியதானால் கூடஉணவுதேட,பறக்கப்பயிற்சிகொடுக்கத்தேவையில்லை. காகமும், சிலம்பன்களும் வாடகைத்தாய்களா? இவை முறையே குயில், சுடலைக்குயில்களுக்கு இரைஊட்டி வளர்ப்பதை என் இரண்டு கண்ணாலும் என் இல்லத்து மரங்களில் பார்த்திருக்கிறேன். நண்பர் விஜயகுமார் சொன்னது போல் டார்வின் தியரிப்படி இப்பறவைகள் இத்தனை நூற்றாண்டுகளில் கூடுகட்டிப் பழகியிருக்கலாமே! ஆனால் இயற்கை காகத்தின் முட்டைபோலவே குயிலின் முட்டை நீல நிறம் ஏன் அமைத்தது? காகத்தின் கூட்டுக்குள் முட்டை வைத்தால் தான் காகம் வளர்க்கும்.சிலம்பன் கூட்டுக்குள் வைக்கக்கூடாது என குயிலுக்கு யார் அறிவுறுத்தியது? வல்லூறு கூட்டுக்குள் வைத்தால் அதோ கதிதான், என எப்படித்தெரியும்? முட்டைகளைத்தள்ளி விட்டு உடைப்பது காகத்தின் பெருக்கத்தைக்குறைக்கவா?மேலும் தன் குஞ்சுக்கு இடநெருக்கடியைத்தவிர்க்க காகத்தின் குஞ்சைத்தள்ளி விடுவது படுவில்லத்தனம். இயற்கை வினோதத்தை என்னவென்பது?இயற்கையைபுரிந்து கொண்டால் நாம் வேண்டும்போது மழை பெறலாமே! Let us thanks our beloved chum N. Radhakrishnan for all Snaps.

Thursday, May 2, 2013


Student Earner
Earn while Learn

          ஒரு அதிகாலைப்பொழுது. பறவைகளை ரசிக்க மருதமலை மலைப்பாதையிலேயே நானும் மோகனும் நடந்துபோனோம். கண்ணில் பட்டது என்னவோ அடிக்கடி வெண்புருவ சின்னான் (White Browed Bulbul)
மட்டும். பச்சைவாயன்(Malkoha) தலைமறைவு வாழ்க்கையில் இருப்பது போல் எங்களைப்பார்த்தால் போதும் மலைக்கொடிகளின் உள்ளே மறையும். முதல் நாள் மழையில் மண்ணின் கீழே உள்ள பூச்சிகள் வெளிவந்தும், பறவைகள் பூச்சிகளைப்பிடிக்க வரவில்லை. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்ப வரும்போது படிக்கட்டுகள் வழியே வரும் போது ஆறாம் வகுப்பு மாணவன் சக்திவேல் கண்ணில் பட்டான்.அவன் தேர்வு விடுமுறையில் கொஞ்சமானாலும் சம்பாதிக்கலாம் என நல்ல எண்ணத்தோடு வீட்டிலிருந்த எடை மெஷினை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு மருதமலை வந்துவிட்டான். கீழே விரிப்பு, காசுகளைப்போட ஒரு டப்பா என பக்தர்கள் ஏறி, இறங்கும் படிக்கட்டு ஓரம் அமர்ந்து விட்டான். உபயோகமான வழியில் பொழுதும் போகும், சிறிதளவு காசும் கிடைக்கும். அவனுக்கு பத்து வயது, என்ன பொறுப்பு!
                                                                                                           White Browed BulBul   
         



















          



          இது போல் ஒரு பையன் எனது இல்லம் வந்து, ‘அம்மா, என்னை வெய்யிலில் ஊரைச்சுத்தாம வீட்டு வேலை எதாவது செய்து சம்பாதி என அனுப்பீட்டாங்க. தண்ணித்தொட்டி கழுவணுமா சார்?’ எனக்கேட்டான். அப்போது என்வசம் வேலை இல்லாததால் மனம் சங்கடப்பட்டது. இது மாதிரிஇளைய பாரதம் உருவாகவேண்டும்.