பயணம் முடிந்த கதை
Migration
day
ஜான்
ஹெரால்ட் ஒரு பாடலை மார்த்தாவுக்கு சமர்ப்பித்து முராரி பாடியுள்ளார். அதற்கு ‘மார்த்தா-கடைசி பயணிப்புறாக்கள்’ எனப்பெயர். Lyrics to "Martha (Last of the Passenger Pigeons)"
Swarm of Passenger Pigeon |
Passenger Pigeon |
Nesting |
Cemetery |
11.05.2013
Passenger Pigeon (Ectopistes migratorius)
பயணிப்புறாக்கள் மரித்த
கதை
நான்
பிறப்பதற்கு முன்னமே இந்த பயணிப்புறாக்களை ஒரே அடியாக மனிதன் தின்று தீர்த்து விட்டான். லட்சக்கணக்காக ஒரு பேரலை போல் வலசை போகும் போது சகட்டுமேனிக்கு வேட்டையாடி
தின்றும், விற்றும் ஏப்பம் விட்டு விட்டான். செப்-1-1914 மார்த்தி என செல்லப்பெயர் வைத்த கடைசி பயணிப்புறா
சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் உயிர் விட்டது. இது வட அமெரிக்கப்பறவை.
இது வட அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி முழுதும் வலசையிலேயே இருக்கும். இதன் அபரிமிதமான எண்ணிக்கையாலேயே இதன் சந்ததி சுவடு தெரியாமல் போய்விட்டது.
அழகான பறவை. இது ஒரு வலசையின் போது,
1886 –ல் தெற்கு ஒன்டோரியாவை அந்த புறா பெரும் கும்பல்(வெள்ளம்!) கடக்க 14 மணி நேரம் ஆயிற்றாம்.
1.5 km அகலம் 500 km நீளம் என்றால் நினைத்துப்பாருங்கள்!
அடேங்கப்பா! நமது பேராசை மக்கள் கண்ணைமூடிக்கொண்டு
நாட்டுத்துப்பாக்கி, கல், வலை, தடி
எனப்பயன்படுத்தி லட்சக்கணக்கில் வீழ்த்தி உள்நாட்டு வியாபாரம்,
ஏற்றுமதி என்று வியாபார நிறுவனங்கள் அமைத்து இந்த
இனத்தையே பூண்டோடு அழித்து விட்டனர். இதன் விஞ்ஞானப்பெயரில்
migratorius இருப்பதும், பொதுப்பெயரில்
passenger என்று இருப்பதும் இது பயணித்துக்கொண்டே இருக்கும் பறவை என
புலப்படுகிறது.
இது மணிக்கு 100 கிமி வேகத்தில் பறந்து செல்லும்.
Nomadic. தனக்கு என்று ஒரு இடத்தில் இல்லாது இரவுத்தங்கல், கூடு வைக்கும் இடம், என எதுவும் இடம் மாறிக்கொண்டிருக்கும்.உயர் மரங்களில்ஒன்றின் மேல் ஒன்றாகக்கூட தங்க, சிலசமயம்
பெரிய கிளைகூட உடைந்துவிடும். அலகை மார்பில் புதைத்துக்கொண்டு
தூங்கும். கால்கள் மறைத்துக்கொள்ளும். ஒரு
இரவு தங்கிய மகா கும்பலின் புறாக்களுக்குக்கீழே ஒரு அடிக்கு மேல் அதன் கழிவுகள்(Excreta) குவிந்திருக்கும். இந்தப்புறா 15 வயது வரை வாழும். ஆனால் மார்த்தா இறக்கும் போது 17 இருக்கும். இவை ஆக்ரான், வெள்ளை
ஓக்குகளைத்தின்று வடஅமெரிக்காவில் காடுகளைப்பரப்பி இருக்கிறது.இரை தேடி ஒரு நாளைக்கு 160 கிமி கூடப்போகும். Phtilopterid louse, Columbicola extinctus, என்ற இரு பறவைகள் தங்கள்
முட்டைகளுக்குகூடு கட்டாமல் பயணிப்புறாவை நம்பியிருக்க, இவைகளும் பயணிப்புறாவோடு அழிந்து பட்டன.
அந்தோ!
வரதட்சனைக்காக
4000 பயணிப்புறாக்கள் கொல்லப்பட்டு அதன் இறகுகளால் ஆன மெத்தை,
தலையணை கல்யாணத்தம்பதிக்கு பரிசளிப்பு நடத்தினர். தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று
வலி, கண்கோளாறு ஆகியவற்றிற்கு பயணிப்புறாக்களின் குருதியையும்,
சதையையும் குடித்தும், தின்றும் இருந்த மக்களை
என்னவென்பது? அப்போதிருந்த காட்டுமிராண்டித்தனத்தை நினைத்து மிரள
வேண்டியுள்ளது. கூடுகளைக்கூட விட்டுவைக்காமல், உயரமான கூடுகளை பெரிய தடி கொண்டு தட்டிக்களைத்தும், மரத்துக்கே
தீவைத்தும், மரத்தையே வெட்டியும், அம்பில்
எய்தும் கூடுகளிலிருந்து குஞ்சுகளை தீயில் வாட்டித்தின்றிருக்கின்றனர்.
பொம்மை பயணிப்புறா, கந்தகப்புகை, உப்பு, சாராயம்கலந்த தானியம் என பயணிப்புறாக்களை ஏமாற்றி
வதை செய்திருக்கிறார்கள். தாளப்பறக்கும் ஆயிரக்கணக்கான
பறவைகளை தடியாலும், கற்களாலும் சம்ஹாரம் செய்திருக்கின்றனர்.
ஒரு குகை போன்று போகும் வலையில் 3500 பயணிப்புறாக்களைக்கூட
பிடித்து விட்ட பராக்கிரமசாலிகள். துப்பாக்கிகள்பேசின.
குழிகளில் நிரப்பப்பட்ட தானியம் புறாக்களுக்கு புதைகுழியாகிப்போனது.
ஒரு வேட்டைக்காரன் தனது வாழ்நாளில் 3 மில்லியன்
புறாக்களை கிழக்கு நாடுகளுக்கு வாணிபம் செய்து பெரும் செல்வந்தர் ஆகிவிட்டானாம்.
சிறுவர்களுக்கு புறாவேட்டை விளையாட்டும், காசுமாகிப்போனது.
ஒரு டஜன் புறா 31to56 சென்ட் விலையானது.
வியாபாரம் செழிக்க, பயணப்புறாக்கள் கோடிக்கணக்கில்
மரித்தன.அவை உலகைவிட்டே மறைந்தொழிந்தன.
மனிதனை மாதிரி குரூரம் இவ்வுலகில் வேறு எந்த ஜீவனிலும்
இல்லை. பயணிப்புறாவைப்பற்றி
எழுதியிருக்கின்றனர். படியுங்கள். இனிமேல் இது தவிர்க்கப்பட வேண்டும் என முடிவெடுங்கள்.
ஜான்
ஹெரால்ட் ஒரு பாடலை மார்த்தாவுக்கு சமர்ப்பித்து முராரி பாடியுள்ளார். அதற்கு ‘மார்த்தா-கடைசி பயணிப்புறாக்கள்’ எனப்பெயர். Lyrics to "Martha (Last of the Passenger Pigeons)"
TThan *
|
Thanks to those who are provide information to my blog thro' Net. It is not used for any commercial purpose and intention is to induce blog visitors to conserve Birds in near future.
மிகவும் சோக சரித்திரம் .
ReplyDeleteசரித்திரம் படிப்பது பெருமை கொள்ள அல்ல.
நம் தவறுகளை திருத்திக் கொள்ளத்தான்!
இனி மேலாவது வேட்டையாடி உயிரினங்களை அழிப்பதை நிறுத்துவோம்.!
இயற்கை செல்வங்களை சூறையாடாமல் பிற உயரினங்கள் காப்போம்!
Dear all,
DeleteMessage for all. Kindly conserve nature-Chinna Sathan,