Koel(F) |
Small GreenBilled Malkoha |
Coucal |
Pied crested Cuckoo |
இனப்பறவைகளின் வாடகைத்தாய்கள்
Cuckoo
Birds
கூடு
கட்டாமல் தன் சந்ததியைப்பெருக்க, அடுத்தவர் தயவில் வாழும் பறவைகள்
இந்த குக்கு இனப்பறவைகள். பல ஆயிரம் வருஷங்களாக கூடுகட்டுவது
எப்படி எனக்கற்றுக்கொள்ளவில்லை. ஆர்வமும் அக்கரையும் இல்லை.
மனிதன் சிலரைப்பயன் படுத்திக் கொள்வது போல், பயன்படுத்தியதற்கு
பிரதி உபகாரமாக எதையும் செய்யாததுபோல,ஒரு வேளை பறவைகளும் அடுத்த
இனப்பறவையை பயன்படுத்திக்கொள்கிறதாகுக்கு பறவைகள் காகம், சிலம்பன் கூட்டில் அத்துமீறிப்புகுந்து, தன் முட்டையை
வைப்பதோடல்லாமல்,அந்தக்கூட்டில் இருக்கும் முட்டையைத்தள்ளி விடுவது
எந்த வகையில் நியாயம்.? குக்கு இனப்பறவைகளுக்கு
சோம்பேறித்தனம் மேலோங்கியுள்ளதா? குக்கு இனப்பறவைகள் எல்லாம்
கூடு கட்டுவதில்லை எனச்சொல்லமுடியாது. இவைகளில் செண்பகம்(Coucal),
பச்சைவாயன்(Malkoha) கூடுகட்டுகின்றன. அடுத்தவரை ஏமாற்றுவதில்லை. தன் சொந்தக்காலில் நிற்கின்றன.
குயில்(Koel),சுடலைக்குயில்(Pied
Crested Cuckoo) முறையே காகம் (House Crow) வெண்தலைச்சிலம்பன் (White Headed Babbler)-களை ஏமாற்றிப்பிழைக்கின்றன.
கூடு கட்ட மெனக்கெடவேண்டியதில்லை. அடைகாக்கவேண்டியதில்லை. குஞ்சுகள் பொரித்தபிறகு உணவு தேடி ஊட்டி வளர்க்கத்தேவையில்லை. சற்றுபெரியதானால் கூடஉணவுதேட,பறக்கப்பயிற்சிகொடுக்கத்தேவையில்லை. காகமும், சிலம்பன்களும் வாடகைத்தாய்களா? இவை முறையே குயில், சுடலைக்குயில்களுக்கு இரைஊட்டி வளர்ப்பதை என் இரண்டு கண்ணாலும் என் இல்லத்து மரங்களில் பார்த்திருக்கிறேன். நண்பர் விஜயகுமார் சொன்னது போல் டார்வின் தியரிப்படி இப்பறவைகள் இத்தனை நூற்றாண்டுகளில் கூடுகட்டிப் பழகியிருக்கலாமே! ஆனால் இயற்கை காகத்தின் முட்டைபோலவே குயிலின் முட்டை நீல நிறம் ஏன் அமைத்தது? காகத்தின் கூட்டுக்குள் முட்டை வைத்தால் தான் காகம் வளர்க்கும்.சிலம்பன் கூட்டுக்குள் வைக்கக்கூடாது என குயிலுக்கு யார் அறிவுறுத்தியது? வல்லூறு கூட்டுக்குள் வைத்தால் அதோ கதிதான், என எப்படித்தெரியும்? முட்டைகளைத்தள்ளி விட்டு உடைப்பது காகத்தின் பெருக்கத்தைக்குறைக்கவா?மேலும் தன் குஞ்சுக்கு இடநெருக்கடியைத்தவிர்க்க காகத்தின் குஞ்சைத்தள்ளி விடுவது படுவில்லத்தனம். இயற்கை வினோதத்தை என்னவென்பது?இயற்கையைபுரிந்து கொண்டால் நாம் வேண்டும்போது மழை பெறலாமே! Let us thanks our beloved chum N. Radhakrishnan for all Snaps.
இறைவன் படைப்பில் ஏமாற்றுவதும் ஒரு கலையே !
ReplyDeleteநண்பரே!
Delete'பித்தரை ஒத்தொரு பெற்றியர்' -சுந்தரர்