Tuesday, May 21, 2013
















Bulbul hillocks
மஞ்சள் கழுத்து சின்னான்               
Yellowthroated Bulbul
(Pycnonotus xantholaemus)

            இந்தப்பறவை சின்னானை இது வரை சந்தித்ததில்லை. ஆனால் மனிதச்சின்னானை சந்தித்திருக்கிறேன். இந்தப்பறவையை மூன்று முட்காட்டுமலைகளில் சந்தித்தாயிற்று. கொண்டைக்குருவிகளும் சின்னான்களும் (Bulbuls) கோவையைச்சுற்றிய பொன்னூத்து, தர்மலிங்கர்மலை, அனுவாவி எனும் மூன்று மலைகளிலும் காணக்கிடைக்கின்றன.மருதமலையில் இருக்கும், ஆயின் கண்ணிலாடவில்லை. Redvented Bulbul, Redwhiskered Bulbul, Whitebrowed Bulbul, Yellowthroated Bulbul இவை நான்கும் உலாவித்திரிவதை ரசிக்கலாம். ‘மேரி புல்புல்எனக்கொஞ்சலாம். முதலில் சொன்ன மூன்று பறவைகள் பார்த்து ரசித்தவை. மஞ்சள் கழுத்து சின்னான் இத்தனை நாள் கண்ணில் பாடாததால் கொஞ்ச முடியவில்லை. இது நாணம் கொண்டதால் பார்க்கமுடியவில்லை போலும். R- Resident-பறவை. பெர்ரிப்பழங்கள், பூச்சிகள் உணவாயிப்போயின. Dr.சலிம் அலி பதிவுப்படி இந்தப்பகுதியில் இல்லாததை வெளிக்கொணர்ந்த CNS, கோவைக்கு பாராட்டுகள்.
            அவர்கள் சொன்ன பொன்னூத்தம்மன் குன்றில் மட்டுமல்ல, அனுவாவி, தர்மலிங்கர் மலையிலும் உலவித்திரிகின்றன. இது இத்தனை நாள் காட்சிகொடுக்காததுஏனென்று பார்த்தால் இவை உள் வலசைப்பறவையாக இருக்கலாம். Dispersal, Irruption என்ற காரணத்தால் கூட இந்தப்பிராந்தியத்திற்கு வந்திருக்கலாம். இப்போது இந்த முட்காட்டுமலைக்கு வந்திருப்பதால் தென்மேற்குப்பருவமழை ஒட்டி கூடு வைக்கக்கூடும். Dr. சலிம்அலி சொல்கிறார், ‘ A confirmed skulker shy and restless”
என்னைப்பார்த்து என்ன வெட்கம் மேரி புல்புல்?


பறவை நோக்கர் தமாஷ்

மகன்; அப்பா எங்கம்மா?

அம்மா;  பைனாகுலர் ரிப்பேர் ஆயிடுத்து. கோழிக்கடைக்குப்போயிருக்கார்.

மகன்;  அங்கல்லாம்  போலாமோன்னோ  நாம?

அம்மா;  அங்க, காடை, கவுதாரி கூண்டுல இருக்குமோன்னோ அத பேர்ட்வாட்ச்பண்ணிட்டு வருவார்.

மைனாக்களை வரைந்தது நணபர் முழுமதி
கொக்கிறகர்   
 யார்? 
Who am I ? 

No comments:

Post a Comment