Sunday, November 24, 2013

காந்தள் மலர்--- Water snow flat வண்ணத்துப்பூச்சி 


Photo courtesy my dear friend Mr. Ramachandramurthy


காந்தள் மலர்--- Water snow flat
(Gloriosa superba) (Tagiades litigiosa Moschler)
                வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழ் பெயர் வைக்க யாராவது முன் வந்தால் நான் உதவத் தயார். கோவையைச்சுற்றி அதாவது சிறுவாணி, வாளையார் பகுதியில் மட்டுமே நூறு விதமான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன . அதை பதிவு செய்துள்ளேன் என்று மூத்த நண்பர் ராமச்சந்திர மூர்த்தி என்னிடம் சொன்னார். Butter flies of Coimbatore surroundings பற்றி யாராவது அடையாள நூல் தமிழில் எழுதி வெளிட்டு தங்கள் பெயரை மனித சரித்திரத்தில்  பதிவு செய்யலாமே! வெறுமனே புகைப்படம் எடுத்து Like வாங்கி முகநூல் ஸ்டோர் அறையில் பூட்டி வைத்து யாது பயன்?வரும் சந்ததி பயனடையுமா? இயற்கையை நோக்கி அவர்களை திருப்புதல் எங்ஙனம், தோழர்களே? சரி! விஷயத்திற்கு வருக!
             
Water snow flat
இந்தப் புகைப்படம் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி வாளையாறில் எடுத்தது. 2000 metre உயரம் வரையுள்ள மலைப்பிரதேசங்களில் இந்த அழகான வண்ணத்துப்பூச்சியைப்பார்க்கலாம். Skippers குடும்பத்தைச்சார்ந்தது. ஸ்கிப்பர் என்றாலே வேகமாகவும், குதித்தும் பறப்பது என அர்த்தம். அதனால் இப்பெயர் வந்தது. Moth அல்லது இது வண்ணைப்பூச்சியா எனும் அளவு குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணத்துப்பூச்சி இனம். இது இறகுகளை கிடை மட்டத்திலும், சில உயரவாக்கிலும் வைத்து அமரக்கூடியது. சூர்ய குளியல் இலைக்கு அடியில் அமர்ந்து எடுக்கும். அதிகமாக பறவை எச்சத்தில் அமரும். மலருக்கும், ஈரமான பகுதிக்கும் வருகை புரியும்.. தனக்கென ஒரு பிரதேசத்தை வைத்துக்கொள்ளும். சின்ன உலா போய் மீண்டும் அதே இடம் அமரும். ஒரு சில பருவத்தில் இமயத்தில் பறந்து உலவும்.

காந்தள் மலர்

          Water snow flat வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருப்பது, சங்க இலக்கியங்களில் பெருமளவு பாடல் பெற்ற அழகான செங்காந்தள் மலர்.  இதன் வண்ணம் மயக்குவதாக உள்ளது. இதற்கு வாசனையில்லை. ஆனால் அதன் சிகப்பு நிறமும், திசைக்கொன்றான மகரந்தக்கேசரங்களும் மிக அழகு. இந்த மலரை முதன்முதலாக கரிமுட்டி, காடம்பாறை மலைமக்கள் வாழிடப்பகுதி, அதாவது வாண்டல் அணை Trekking (பார்க்க; வெளியிட இருக்கும் மலைமுகடு(Trekking) நூலில்)செல்கையில் கைக்கு எட்டியதைப்பறித்தேன். கொடியில் பூக்கும்.  எனது தோழி செங்காந்தள் மலரைப்பறித்து தன் கூந்தலில் சூடிக்கொண்டது வினோதமாக இருந்தது. இந்த மலரை பெண்ணின் விரலுக்கு உவமை கூறும் சங்க காலத்திய செய்யுள்கள் ஏராளம்.(சங்க காலம்; கி.மு-லிருந்து 3-ம் நூற்றாண்டு வரை) பிறகு இந்த மலர் கோவை ஆச்சான் குள ஏரிமேட்டில் கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்தேன். இதன் விதை ஏற்றுமதி செய்கிறார்களாம். கண்ணுக்கு நல்லது என கிராம மக்கள் சொல்கின்றனர்.ஏற்றுமதி செய்த விதைகளிலிருந்து கண்சொட்டு மருந்து தயாராகி வருகிறதாம். இதை இந்தியாவில் யாராவது முயற்சித்தார்களா!

 காந்தள் மலருக்கே ஒரு நூலைப்படைக்கலாம். அப்படி பாராட்டுகள் வாங்கும் மலர். இதோ;-
‘செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்’ – சிறுபாணாற்றுப்படை
வளமையான கொத்துகளாக, பெண்ணின் கை விரல்களாகவே பூத்தன.

ஒண்செங்காந்தள்’- குறிஞ்சிப்பாட்டு
இயற்கை அழகோடு கூடிய செங்காந்தல் மலர்.

முளிதளிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’- குறுந்தொகை
மிருது தோய்ந்த அழுத்திய காந்தள் மலர், அழகான பெண்ணின் கை விரல்கள்.

 Migration of Birds talk delivered with power point presentation before Royals Rotarians, Pollachi Bharathiya vidhya mandhir School.

Sukumar(Chinna Sathan) Author of Diary on the nesting behaviour of Indian Birds receiving bouquet from Mr. Senthil Kumar Kalingarayan, BVB School Correspondence, Chartered Engineer, Mr. Karthikeyan, Bank Manager, Dhanalakhsmi Bank and Mr. Sivakumar, GM Sakthi Soyas were looking on. Mr. K.P. Dhanabalakrishnan, President of Club, Civil Engg., HOD, Eswar College has arranged this function.  










           

            

No comments:

Post a Comment