Monday, November 18, 2013

Giant wood Spider                   Wonders in Nature
(Nephila- family)

            

Dress made up of Giant wood Spider web filaments- exhibited in London Victoria museum 

male Spider less than 5 cm seen on 4" female Spider

      இந்த சிலந்தியை நான் ஆனைகட்டி தாண்டி, உள்ள ஜல்லிப்பாறையில் பாதையோரமாக, வலையில் சிலவற்றைப்பார்த்தேன். முந்திய இரவு மழை பெய்த ஈரம் இருந்தது. மறுநாள் காலை அடர்த்தியான வெண்பனி போலார் கரடிகள் போல மலைப்பள்ளத்தாக்குகளில் நகர்ந்து போய்க்கொண்டிருந்தன. ஜில் காற்று, விரல்களை பாண்ட் பாக்கெட்டுக்குள் திணிக்கச்சொன்னது. இந்த மாதிரி சிலந்தி பலவற்றை இப்போது சந்தித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம் ஏனெனில் இதன் பரிமாணம். வலை முழு வட்டமே 2 மீ இருக்கும். நடுவில் 4 அங்குலம் அளவிலான பல வண்ண நிறத்தில் ஒரு சிலந்தி அமர்ந்திருந்தது. அதன் வலை கெட்டியாக இருந்தது. அளவான காற்றிலும், மழையிலும் தாங்கும். வலை நின்ற வண்ணத்தில் அருகிலிருந்த மரத்தில் ஒட்டிச்சுற்றியிருந்தது. (verticle and elliptical) இது பறந்து வரும் வண்ணத்துப்பூச்சி, பறக்கும் மற்றும் துள்ளித்தாண்டும் பூச்சிகள் அதன் வலைவிரித்த பாதையில் வந்தால் சிறைபட்டு சிலந்திக்கு உணவாக வேண்டியது தான். சின்னப்பறவை அறியாமல் பறந்து வந்து மோதினால்  வலையை கலைத்துத்தப்பிவிடும். வலை ஆரத்துக்குள் ஒருசில இறந்து  பட்ட ஜிவன் கழிவு, வண்ணத்துப்பூச்சியின் சிறகை விட்டுவைப்பது, சின்னப்பறவைக்குவலையிருக்கு பாத்து வாப்பாஎன சிலந்தி எச்சரிக்கை செய்கிறது.
இன்னொரு அதிசயம், என்னை வியக்க வைத்தது போல உங்களையும் வியக்க வைக்கவேண்டுமென்றே, இதைப்பகிர்ந்து கொள்ளவிருப்பம். ஆண் சிலந்தி 5 செ.மி.க்கு மேல் இல்லை. பெண் 4 அங்குலம் ஆனால் ஆண் 5 செ.மீ. நெட்டை மனுஷியும் சித்க்குள்ளனுக்கும் ஜோடி வைத்த இறைவன் ஒரு தீராதவிளையாட்டுப்பிள்ளை தான். 2 மீ வலைப்பரப்பில் ஆண் 1 () 4 () 5 இருக்கலாம். இவை  பெண் பிடித்த இரையைத்திருடி, மிச்ச மீதியைத்திண்ணும். தனது கெட்டநேரத்தில், விபத்தாக மாட்டிய உயிரியின்  உடலில் Neurotoxin ஏற்றி அதை செயலிழக்கச்செய்யும். பெண் சிலந்தி உணவு உண்ணும் போது, ஆண் சிலந்தி பின்புறமாகச்சென்று முதுகில் ஏறி அமர்ந்து பாலுணர்வைத்தூண்டும். பெண் சிலந்தி கருத்தரித்து, பிறகு மண்ணில் துளையிட்டு முட்டையிடும். குட்டி சிலந்திகள் பிறந்ததும், சகோதர, சகோதரி சிலந்திகள் தங்களுக்குள் சண்டையிட்டு தின்பதற்குள் குட்டிகள் வெளியேறப்பார்க்கும். இந்த சிலந்தி நம்மைக்கடித்துவிட்டால் விஷமில்லை….என்ன..ஒரு நாளைக்கு வலிக்கும். இன்னொரு வினோதம் என்னவென்றால்  மூன்று நூற்றாண்டுக்கு முன்பு இந்த வகை சிலந்தி வலையில் நெய்த பளபளக்கும் கண்ணைக்கவரும் மஞ்சள் நிற உடை விக்டோரியா, லண்டன், மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. இறைவன் படைத்த லோகத்தில் என்னென்ன விந்தை!                          
 இளைஞர்கள் நிழற்படம் மட்டும் எடுத்து Like வாங்கி என்ன பயன்? அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம் இணையங்களுக்குப்போய்,() நூல்களைப்படித்துத்தெரிந்து கொள்ளவாவது செய்யாலாமே…….. இது பற்றி விபரத்தோடு பிற இளம் மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுக்கு இயற்கையின் பால் ஈர்ப்பு வரும். இயற்கையைப் பேணுதலுக்கு பலர் முன் வருவர். சிலர் ஆராய்ச்சியில் இறங்கி, சில புது கண்டுபிடிப்புகள் வரவாய்ப்பு உண்டு. படியுங்கள்-பிறகு சிந்தியுங்கள். அழகான நிழற்படம் மட்டுமே போதாது.

Thanks to various websites/bloggers-Reproduced for education purpose



No comments:

Post a Comment