Green lynx spider
(Peucetia Viridana)
பச்சை
சிலந்தி
நிழற்ப்படத்தில்
அழகு காட்டும் பச்சை சிலந்தியை நான் ஒரு விபத்தாக கோவை சிங்காநல்லூர் குளக்கரையில்
சந்தித்தேன்.
என்ன அழகு! உடனே என் நிழற்படபெட்டிக்குள் அடைத்தேன்.
இவை இரண்டு வகை. அமெரிக்காவில் ஒரு இனம்.அடுத்து இந்தியா மற்றும் மயன்மாரில் உள்ளது. நம் நாட்டுச்சிலந்தியை
கரை ஓரம் அடவியிருந்த உயரக் குறைவான செடிகளில் கண்டேன். உடல்
இரு பாகங்களாகப்பிரிந்து வெளிர் பச்சையாக உள்ளது. எட்டுக்கால்கள்
வெகு நீளமாகஊடுருவிய வெள்ளை, அத்துடன் சிறிய கருப்பு முடிகள்
உள்ளன. உடலின் முன் பாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான கருப்புப்புள்ளிகள்,
இரண்டாவது பாகத்தில் இலை நரம்புகள் போல வெள்ளையாக இருப்பது காணமுடிகிறது.
இதில் ஒரு சிலந்தி தன்னைவிட உருவத்தில் பெரியதான கரப்பான்பூச்சியைப்பிடித்து
கபளிகரம் செய்வது ஆச்சர்யத்தை வரவழைத்தது.
‘சட்’டெனப்பார்த்தால் இவை புலப்படுவதில்லை. இலைகளில் அமர்ந்திருப்பதால் பச்சைக்குப்பச்சை ஒன்றிப்போகிறது.இதன் cousin brother (Peucetia viridan) அமெரிக்கப்பிரஜை.
இது பற்றி தகவல்கள் நிறைய வலைதளத்தில் கிடைக்கும் போது நமது பிரஜை
viridana பற்றி படமும் உருவத்தைபற்றிய விபரமும் தவிர ஒன்றுமில்லை.
விரிடான் கடித்தால் வலிக்கும். ஆனால் விஷமில்லை.விரிடானா நம்மைக்கடித்தால் வலிக்குமா?, அத்தோடு விஷம்
ஏறுமா? என்பது தெரியவில்லை. விரிடான் விவசாயத்துக்கு
தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணுவதால் விவசாயிக்கு பயன் விளைகிறது.
அதே சமயம் அமெரிக்கர் இது தேனீயைப்பிடித்து உண்பதையும் பார்த்துவிட்டனர்.
ஆக இது பூச்சிகள் எது கிடைத்தாலும் விடுவதாக இல்லை. நமது நாட்டு பிரஜை விரிடானா கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட சகோதரன் விரிடான் போல தான்
வாழ்க்கை இருக்கும் என நினைக்கிறேன். விரிடான் இனப்பெருக்கம்
உட்பட வாழ்க்கை மிக ஸ்வராஸ்யமாக உள்ளது.வலைதளத்தில் படித்து வியப்படையுங்கள்.
இயற்கையின் படைப்புகளை கண்டு வியப்பது, அதன் மேல்
ஒரு மரியாதை, அதை பாதுகாக்க வேண்டும் என்பது ஆன்மிகத்தின்,
முதல் படி. விரிடானா பற்றி ஆராயுங்கள் அல்லது அது
பற்றி நூல்களில்ஏற்கனவே பதிவாகியிருந்தால் என் வலைதளத்துக்கு(comment) வந்து இது பற்றி பதிவு செய்யவும். Wikipedia விரிடானா
பற்றிய விபரங்களை பதிவு செய்ய உங்களை வரவேற்கிறது.
No comments:
Post a Comment