Tuesday, September 24, 2013



BIRD RESCUE





       அதிகாலைப் பொழுது ஆகாயத்தில் நீர்காகங்கள் பறந்தவாறு அணிவகுக்கும் அழகை ரசித்திருக்கிறீர்களா? ‘V’ வடிவம், அலை வடிவம், என அணிவகுத்துப்போகும் அழகை விவரிக்க எந்த மொழியிலும் உங்களுக்கு நான் சொல்லமுடியாது. சில சமயம் பல கருப்பு சேலைகள் காற்றில் பறந்து போவது போல போகும் அழகை என்னென்று விவரிப்பேன்.
            இவை பள்ளிச்சிறார் போல பலர் நீரில் ஒருத்தரை முந்தி ஒருத்தர் போவது போல நீரில் மீன் தேடி, மூழ்கிப்போவது, ஓ! அந்த பரவசத்தை எப்படி எழுத்தில் வடிப்பேன்? மூன்று நீர்காகம் வகையில் சின்ன நீர்காகம்(Little Cormorant) பற்றிதான் சொல்கிறேன்.
திடீரென்று நான் பார்த்து ரசிக்கும் போதே நீரில் ‘பொசுக்’கென மூழ்கி கண்ணாம்பூச்சி விளையாடும் சில்மிஷத்தையும், மூழ்கிய இடத்தில் நீர்வட்டம் தோன்றி சற்றே பெரிய பெரிய வட்டமாகி மறைந்து போகும் ஏகாந்த வனப்பை அனுபவித்தால் தான் தெரியும்.
ஒரு நாளைக்கு 2-3 கிலோ மீன் சாப்பிடும் என் ப்ரியமான நீர்காகம். அதை மீனவன் விரும்புவதில்லை. ஏனெனில் இவை மீனவனுக்கு மீனைக்குறைக்கிறதாம். பல வருஷங்களுக்கு முன்பு கேரளத்தின் மீனவர், நீர்காகத்தின் எண்ணிக்கை பெருகிவிட்டது, அதனால் கழுத்தைத்திருகி கொன்று, எண்ணிக்கையைக்குறைக்கவேண்டும் என்ற செய்தி படித்தேன்.
இது இப்படி இருக்க, வடஇந்தியாவில் இந்த நீர்காகத்தின் கழுத்தில் வளையமிட்டு படகிலிருந்து மீனவர் நீரில் விசிறி,, அது மீனைப்பிடித்ததும் ‘தர,தர’வென இழுத்து பிடித்த மீனை அபகரித்து, மீண்டும் நீரில் எறிவர்.
மீனவர், நாள்முழுக்க குளத்து நீருக்குள் மதில் மாதிரி தொங்கவிடும் வலையில் மாட்டி இறக்கும் பரிதாபம் மிகையான வருத்தமளிக்கிறது. மேலும்  பொறுப்பற்ற மனிதன் போடும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்காகம் மற்றும் நீர்பறவைகளால் உட்கொள்ளப்பட்டு, இறப்பது விசனமளிக்கிறது.

இதற்கெல்லாம் தீர்வு,  குளத்தை பராமரிக்கும் PWD, சுற்றுசூழலுக்காகவே இருக்கும் Environment Dept, மின்பிடிக்க உபகரணம், மற்றும் நீருக்குள் மதில் கட்டும் வலைவிரிப்பைக்கற்றுக்கொடுத்த Fisheries Dept. கழுத்தில் வளையமிட்டு மீன் அபகரிக்கும் நரிபுத்தியை SPCA, Blue Cross, Forest Dept என அவரவரின் பொறுப்பு,கடமையை(Duty)செய்தால் பறவைகள் பிழைக்கும்.

            

Thursday, September 19, 2013

BIRD RESCUE                                      
உலகம் முழுதும் வருஷத்துக்கு  4 லட்சம் கடல் பறவைகள் இறக்கின்றன
மனிதனின்ஆபத்தான மீன் வலை மற்றும்
பிளாஸ்டிக்கழிவுகளே காரணம்- புள்ளியலில் ஆறு, குளம் இல்லை













             உயிரினம்வாழத்தகுதியற்ற 

உலகம் ஆக்கிவிடுவான்!


குளத்துநீருக்குள் மதில் சுவர் போல மீன்வலையை 48 மணிநேரம் தொங்க விடுவதால் அதில் சிக்குண்டு இறக்கும் பறவைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு மாய்ந்து போகும் பறவைகள் உலகம் முழுவதும் 4 லட்சம் என புள்ளியல் சொல்கிறது. மனிதனின் சொகுசு வாழ்க்கையால் எத்தனை உயிர் பலி! எத்தனை சுற்று சூழல் மாசு! 2000 மைல் நதியில் பிரயாணித்துக்கடலில் கலந்த பிளாஸ்டிக்கழிவுகளை அல்பாட்ரஸ் எனும் கடல் பறவைகளால் உணவு என உண்ண, உயிர் போன பறவைகள் ஏராளம். இதில் மற்ற பறவைகளும் சேர்த்துத்தான். மனித நாகரிக நகரம் 2000 மைலுக்கு அப்பால் இருந்தும் எவ்வளவு தூரம் பிளாஸ்டிக் மாசு பரவுகிறது, பாருங்கள!
பறவைகள் மட்டுமள்ள விலங்குகளும் இதில் அடக்கம். மனிதர்கள் நாகரிகம் அடைந்தவர் எனச்சொல்ல முடியுமா? அவன் முன்னோர் (மீனவர்) மாதிரி தோளைச்சுழற்றி மீன்வலைவீசினால், பறவைகள் வலையில் மாட்டாது. தேவையற்ற வலைத் துண்டுகளை குளக்கரையில் வீசிவிடுவதும், மற்றும் நீருக்குள் அமிழ்த்தும் மீன் வலையும், பெரிதும் ஊறுவிழைவிக்கின்றன. பறவைகள் வலையில் சிக்கி வேதனையுடன் மாய்ந்து போகின்றள. பறவைக்குஞ்சுகளுக்கு இரை எது? பிளாஸ்டிக் கழிவு எது? என எப்படி பாகுபடுத்தும்? அப்படியே விழுங்க வலியில் துடிதுடிக்க மடிகின்றன. மனிதன் சம்பாதணையுடன் சொகுசாக இருந்தால் போதும் என நினைக்கிறான்! மற்ற உயிரினங்களைப்பலி கொண்டு எப்பேர்பட்ட பெருவாழ்வு வாழ்கிறான் பாருங்கள்! இந்த அவலம் மேற்கொண்டு நடக்காமல் இருக்க அரசும், அரசு சாரா அமைப்புகளும்(NGO), நாமும் என்ன செய்யப்போகிறோம்?

இது என் அனுபவம். கேளுங்கள்! அமராவதி அணைப்பகுதியில் நான் தூவானம் வனவலம்(Trekking) போய் திரும்பும் போது ஒரு கொண்டைக்குருவி மீனவர் விசிறி விட்ட துண்டு வலையில் மாட்டித்தவித்ததை பார்த்து விடுவித்திருக்கிறேன். சூலூரில் குள நடுவே இருந்த சிறு தீவில் காலில் மாட்டி தவித்த மாட்டுக்கொக்கினை வாடகைக்கு படகு எடுத்துப்போய் விடுவித்திருக்கிறேன். பள்ளபாளையம் குளத்தில் முக்குளிப்பான் வலையில் மாட்டி தவித்ததை பரிசலில் சென்று விடுவித்தேன். (இந்த விபரம் மழை குருவி வலைப்பூவில் ஏற்கனவே எழுதியுள்ளேன். பறவை பாதுகாப்பு தொகுப்பில் படிக்கவும்)நீங்கள் பார்க்கும் இரண்டு இறந்த சின்ன நீர்காகங்கள் வலையில் சிக்கி, சூலூர் குளக்கரையில் இறந்து கிடந்தவை. இது குறித்து மீன்வளத்துறைக்கு நான் எழுதி எந்த விளைவுமில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் Fisheries dept- க்கு மீன் பிடிக்கும் முறையை மாற்ற வேண்டும் என வற்புறுத்தி உடனே எழுதவேண்டும். 

Wednesday, September 11, 2013



 Wild life in Residential area




பெரிய மரப்பல்லி
 Wild life in Residential area
Tree Lizard
            ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்து வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய பல்லி வயிற்றிலிருந்து 6-7 முட்டைகள் சிதறிப்போய் பின் பாதி உடல் இல்லாமல் கடிக்கப்பட்டுக்கிடந்தது. அந்தோ! முட்டைகள் வெள்ளையாகவும், ஓவல் வடிவத்திலும் ரப்பர் போல வெளி ஓடும் இருந்தது. வயிற்றில் ஒரு முட்டை வெளியில் வராமல் இருந்தது. பரிதாபம். எத்தனை ஜீவன்கள் மடிந்து போயின!  10-20 முட்டைகள் இடும் இந்தப்பல்லி இனம், முட்டைகளை ஈரமண்ணில் புதைத்து வைக்கும். 7 வாரத்தில் குஞ்சு பொரிக்கும்.
            இவற்றிற்கு இரை பூச்சிகள், சின்ன ஊர்வன போன்றவை. பற்கள் இரையைப்பற்ற மட்டுமே முடியும். கிழிக்கவோ, அரைக்கவோ முடியாது. இரையை அப்படியே விழுங்கும்இனப்பெருக்க காலத்தில் தலை சிகப்பாக மாறும்.காதல் காலத்தில் வில்லனாக மற்றொரு பல்லி வந்தால் சண்டை மூழும்.
            எங்கள் காலனியில் பூனைகள் கொஞ்சம் அதிகம். யாரும் வளர்த்துவதில்லை. இருப்பினும் இவை குட்டிகளிட்டு தங்களுக்குள் ஒவ்வொரு வீட்டைதேர்ந்தெடுத்துக்கொண்டு கொல்லைப்புறம், முற்றம், தோட்டம் என உலவி கிடைப்பது உண்டு வாழும். எங்கள் வீட்டில் சுற்றித்திரியும் ஒரு பூனை பெரிய மரப்பல்லியை இரவில் வேட்டையாடிவிட்டது. மரப்பல்லி வாயும் வயுறுமாக பூனையிடம் அகப்பட்டது பரிதாபமாக இருந்தது.

        எனது வீட்டைச்சுற்றி கற்பகவிருக்ஷங்களாய் மரங்களை நூற்றுக்கனக்கில் நான் வளர்த்ததால் தான் ஒரு குடியிருப்புப்பகுதியில் என்னைச்சுற்றிஇப்படிப்பட்ட சுவராஸ்யங்கள் நடந்தேறுகின்றன. உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மரங்கள், வண்ணத்துப்பூச்சிகள், ஊர்வன, பறவைகள், பூச்சிகள் , வண்டுகள் என உயிர்ப்பான காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவரும்.

Saturday, September 7, 2013

மஞ்சள் அரளிப்பூவை மழை குளியலுடும் போது எடுத்த நிழற்படமிது
                                                                                     
                                                                                வண்ணத்துப்பூச்சி
   Southern Birdwing                                                                                                                                                                                                     Butterfly 
தெற்கத்திய பறவைஇறகு
Southern Birdwing                     
(Troides minos)
                வண்ணத்துப்பூச்சிகளுக்கு எப்போது நாம் தமிழில் பெயர் சூட்டப்போகிறோம்இதற்கு தெற்கத்திய பறவைஇறகு என நான் பெயர்சூட்டி அழகு பார்க்கிறேன். இது மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், புதர்கள், விவசாயநிலம் எனப் பார்க்கலாம் என ஐசக் கெஹிம்கர் நூலில் (The Book of Indian Butterflies) குறிப்பிட்டிருக்கிறார். அதிகாலைப்பொழுதில் சுறுசுறுப்பாக மரங்களின் உயரத்தில் தேன் பருகப்பறக்கும். Endemic –மக்கள் காடுகளை சூறையாடி இவற்றைப்பெருகவிடாமல் செய்துவிட்டனர். பருவமழைக்குப்பின்னும், முன்னும் பார்க்கலாம். வருஷம் முழுதும் பார்க்கவும் முடியும். இதை நான் 14.09.13(புதன்) அன்று எனது  எசு.வி.எல் காலனி, சூலூரில் பார்த்தேன். இதற்கு முன்னும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். பார்த்த போது காலை 10.15-நல்ல வெய்யில். ஆண் வண்ணத்துப்பூச்சி மஞ்சள் அரளிப்பூ புதர்  செடியின் 15 அடி உயரத்தில் பூத்திருந்த மஞ்சள் பூவில் தேன் உறிஞ்சிய அழகைப் பார்க்க இந்த இரண்டு கண்கள் போதுமானதாக இல்லை..
            இந்தியாவின் பெரிய வண்ணத்துப்பூச்சி(பெண்) இது தான். பெண்ணைவிட ஆண் வண்ணத்துப்பூச்சியை அதிகம் பார்க்கலாம். பெண்ணில் மஞ்சள் கீழ் இறகில் மேற்புறம் கரும் புள்ளிகள் இருக்கும்.
ஆணுக்கு மேற்புற கீழ் இறகில் தங்க மஞ்சள் நிறம் இருபுறம் இருக்கும். பிறகு வெல்வட் கருப்பு அதற்குப்பின் இருக்கும். மஞ்சள் இறகு வண்ணத்துப்பூச்சி பார்க்க அட! அடா!! மஞ்சள் அரளிப்பூவே காற்றில் மிதப்பது போல் இருந்தது. காடுகளில் சுற்றித்திரியும் தெற்கத்திய பறவைஇறகு எமது பகுதிக்கு வந்தது அபூர்வம். திடீரென தாழப்பறந்து மறைந்து விட்டது. இவை உணவுத்தாவரங்களான Aristolochia indica, Aristolochia tagala, Thottea siliquosa சுற்றியே தங்கள் வாழ்வை அமைக்கும். நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் வீடு கோவைப்புதூர். அங்கு வண்ணத்துப்பூச்சிக்காகவே Aristolochia indica வளர்த்துள்ளார். அதில் Southern Birdwing முட்டை வைத்து, புழுவாகி, கூட்டுப்புழுவாகி வண்ணமயமான இறகைவிரித்து பறக்கும் வனப்பில் பரவசப்பட்டவர்களுக்குத்தான் நான் சொல்லும் அருமை புரியும். மூர்த்தி சார் கனணி கோப்பில், அவர் எடுத்த 130 வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அதிலிருந்து எடுத்து இங்கு தந்துள்ளேன். நன்றி மூர்த்தி சார்.

            

Thursday, September 5, 2013


பூநாரைகள் (Greater Flamingo)
(Phoenicopterus ruber)
 தமிழகத்தில் வருஷம் முழுவதும் இருக்கின்றனவா?


பூநாரைகள்-கருங்குளம், திருநெல்வேலிக்கருகில்
கைவிடப்பட்ட கூட்டுக்கருகில் பூநாரை கால்தாரை

பாதி அழிந்த கூடுகள்


          ஆம்! என்றே சொல்லத்தோன்றுகிறது. சென்னை,பள்ளிக்கரனை சதுப்புநில நீர்நிலையில் வருஷம் முழுவதும் பார்க்க முடிகிறது என்பது மிகையல்ல.கூந்தகுளம்,காடன்குளம்,கருங்குளம்,வடக்கு விஜயநாராயணம் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையோர நீர் குறைவான ஏரிகளில் வலசைப்பருவம் இல்லாதபோதும் பார்த்திருக்கிறேன். ரானா ஆஃப் கட்ச்(குஜராத்) பகுதி பூநாரைகளுக்கு சொந்த பிரதேஷம். அங்கு தான் இனப்பெருக்கம் நடைபெறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்-மார்ச் வலசைப்பருவம் வந்து பின் குஜராத்துக்குத்திரும்பிவிடும் என்பது பதிவு.
           
  ஒரு பருவத்தில் பூநாரைக்கூடுகள் பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டவைகளை கூந்தகுளத்திலும், காடன்குளத்திலும் பார்த்தேன். பூநாரை ஒரடி போல குளத்தோரநீரில் சேற்றைக்கொண்டே குயவன் சட்டி போல் வளைந்த மூக்கால் ஒரடி உயரம் கட்டி அதன் மேல் ஒரு முட்டை வைத்து அடைகாக்கும். கூடுகளைக்காலனியாகப்பார்க்கலாம். இதற்கு உகந்த ஒரு அடி அளவிளான நீர் வற்றிவிட்டதாலும், அல்லது மிகையானதாலும் பூநாரையால் கூட்டை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்பாதி உருவான கூடுகள் கைவிடப்பட்டன. நிழற்ப்படத்தில் காண்பது அத்தகையகூடுகள்தான்.

            நானும் சும்மாஇருக்காமல் கூந்தகுளத்திற்கு நீர் தரும் மணிமுத்தாறு பொதுப்பணித்துறைக்கு எழுதி சரியான அளவு நீரை கூந்தகுளத்தில் தேங்க விட்டால் தமிழகத்தில் கூட பூநாரைகள் இனப்பெருக்கம் செய்யும் என்றேன். இது தவிர BNHS, Mumbai-க்கு எழுதி இது குறித்து மேலிடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்ட,திரு. Asad R Rahmani,Director, BNHS, Mumbai எனக்கு ஒரு அழுவலகக்கடிதம் எழுதினார். அதில் இதனால் தான் BNHS, கூந்தகுளம் IBA (Important Bird Area) என பிரகடனப்படுத்தியுள்ளோம், என்று எழுதியதோடு சரி!