NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE
இயற்கை என்றுமே சரியானது
NATURE IS ALWAYS RIGHT
கவிதை ஆன்மாவின் இளைப்பாறல்
காளான்களாய்
சாலையில் குடைகள் முளைக்க
மழைக்கரங்களதில்
தாளமிட்டு மகிழ,
நீந்தியவாறு
நாமக்கோழிகள் நனைய
தெரியுமதற்கு
தன் நாமம் அழியாதென்று;
இலைகளின்
தலையைத்தட்டிய மழைக்கரம்
அமிர்தமூட்டியது
நிஜமே! தெரிகுது
குதித்தாடிய
இலைகளின் குதூகலத்தில்;
மின்
கம்பத்திலமர்ந்த பறவைகளே! இறகு கோதாதீர்!
இன்னும் மேகத்தில் மழையுண்டு.
காதலி
முத்தமிட மயிர்க்கால்கள் சிலிர்த்ததென
தடாக
நீர்மேனி சிலிர்த்தது நிஜமே!
வாழிய!
மழை! மாதம் மும்மாரி பொழியவே!
இன்னும்
மேகத்தில் மழையுண்டு! நண்பரே!
குடைதேடி,
தூசிதட்டி வைக்கலாமே!-------------- சின்ன சாத்தன்
-
Re-connect to Nature Re-connect to Nature
No comments:
Post a Comment