பறவை
அறிமுகம்
கதிர் குருவிகள்
(Warblers)
கதிர் குருவிகள் குருவி அளவில்
சிறியதாக இருக்கும்.
புதர்களில் மறைந்தும், சற்றே வெளிப்பட்டும் ஒரு
இடத்தில் நில்லாது இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். இருபது வகைகள்
இருக்கும். இவைகளை இனம் காண்பது பரம கஷ்டம். புகைப்படத்துக்கு சிக்காது. கதிர்குருவி வழக்கமாக வரும்
புதர் அருகில் மறைவாக பொருமையாகக்காத்திருந்தால் புகைப்படத்துக்கும் மாட்டும்,
அடையாளமும் கிடைக்கும். இவற்றின் வாழிடம் மற்றும்
குணாதிசயங்களை வைத்து இனம் கண்டு பிடிக்கலாம். மேலும் பொதுவாக
நிறம், பரிமாணம், கண்புருவம், வால் அமைப்பு, தனித்து, அல்லது
ஜோடி என்பன வைத்து இனம் கண்டு பிடிக்கலாம். முதலில் பறவை கண்காணிப்புக்கு,
தொலைநோக்கி தான் பிரதானம். ஒரு புதுப்பறவையை இனம்
கண்டு, சலிம் அலி நூலில் அது பற்றி மேலும் விபரங்கள் படிக்கும்
போது பரவசம் கொள்கிறோம். அன்று இரவு தலையணையில் முகம் புதைக்கும்
போது கூட பறவையும், அதன் நளினஅசைவும், அழகும்
நினைவில் ததும்பி வழிகிறது. பல நாட்களுக்கு மனதில் நினைவு மணக்கிறது.
அது போல வயல்வெளி கதிர்குருவி (Paddy Field Warbler) என்னை பரசத்தில் மூழ்கடித்தது.
No comments:
Post a Comment