மீன் பிடிப்பு
ஏரி,
குளங்கள் மாசுபாடு
கண்ணம்பாளையம் குளத்தில் செத்து மிதக்கும் cat fish
நமது ஏரி, குளங்களின் அவலம் சொல்லி மாளாது. நீர் வணங்கக்கூடியது.
ஆடிபண்டிகையில், மலர்களை நீர் பரப்பில் தூவி வழிபாடு
நடத்துகிறோம். ஆனால் குளங்களில் வேதியல் சாயம் பூசிய வினாயகரைக்கரைப்பது,
சடங்குகள் செய்து முடித்த பொருட்களை சேர்ப்பது, கட்டிடக்கழிவுகளைக்கொட்டுவது, சாக்கடை நீரை கலப்பது,
சாயக்கழிவை விடுவது, மலஜலம் கழிப்பது,மருத்துவக்கழிவு கொட்டுவது என எல்லாவிதத்திலும் மாசுபடுத்தி விடுவது நடந்து
கொண்டே இருக்கிறது. நீர் நிலை தான் நிலத்தடி நீர், மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரம். பஸ் டிப்போ,
பஸ் ஸ்டேண்ட், பவர் ஹவுஸ், குடிசைகள் அரசு, தனியார் என ஆக்கிரமிப்பு. தூர் வாறுவது கிடையாது. சாக்கடை நீரில் ஆகாசத்தாமரை சத்தாக
வளரும். இத்தனை மாசுபாட்டிலும் வருடம் முழுக்க மீன் பிடிப்பு.
இந்த விஷமேறிய மீன்களும் வியாபாரம் செய்யப்படுகின்றன. மக்களும் மசாலா மயக்கத்தில் உண்ணுகிறார்கள். இதை சுகாதரத்துறை
கண்டு கொள்வதில்லை. குளங்கள் விஷமேறிக்கொண்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு
வாரியம் அசட்டை செய்கிறது. PWD – யிடமிருந்து நகரக்குளங்களைப்
பொறுப்பேற்ற மாநகராட்சி கையைக்கட்டிக்கொண்டு வாலா இருப்பது என்பதெல்லாம் எதைக்குறிக்கிறது?
அரசு நிர்வாகங்கள் செயல் படுவதில்லை, எனக்காட்டுகிறது.
இருகூர் குளத்தை, இருகூர் பஞ்சாயத்து சாக்கடை குளமாக்கியது,
அவர்கள் சாதனை. அங்கிருந்து நுரைத்து பொங்கிப்போகும்
சாக்கடை நீர், ஆச்சான் குளம் செல்கிறது. சூழல் ஆர்வலர் கரடியாகக்கத்தியும் பயனில்லை. இதே நிலை
நீடித்தால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில்
இருகூர் குளம் மாதிரி அனைத்து நகரக் குளங்களும் சாக்கடைக் குளங்களாகும்.எந்தஉயிரினமும் விஷச்சாக்கடை குளங்களில் வாழாது. மக்கள்
பயன்படுத்தும் கிணறுகளின் நீர் மஞ்சலாகி பயன்படுத்த முடியாத விஷ நீராகும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment