![]() |
கல்வெட்டு |
![]() |
கூலித்தொழிலாளி |
![]() |
புளியமரங்கள் |
![]() |
ஆசிரியர் (ஓய்வு) |
அனுப்பபட்டி தர்ம சிந்தனையாளர்
அனுப்பபட்டி கிராமம் அப்போது செழிப்பான
கிராமமாக இருந்திருக்க வேண்டும். இந்த கிராமத்தில் தான் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஜி.டி.
நாயுடு பிறந்தார்.
1947-ல் சுதந்திரமடைந்த ஆண்டில்
ஒரு கல்வெட்டு அனுப்பபட்டி பெரிய தனக்காரர் (லேட்)திருவாளர் நா. வெங்கிடுசாமி நாயுடுவால் நிறுவப்பட்டு
கிராமத்து மையப்பகுதியில் கல்தூண் ஒன்று நடப்பட்டுள்ளது. அதில் கண்டுள்ள வாசகம் பின்வருமாறு;-
1947 வந்தே மாதரம்
சுதந்திரோதய சர்வ ஜித்துக்கு கா.நெ.மா. 200-ம் 18
7 1/A 5 80 11 ஜெய்ஹிந்த். நாவே அனுப்பபட்டி
, இவ்வூரில் ஹரிஜனர் முதலிய ஏழைகளின் கல்வி வசதிக்காக 56 புளிய
மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டுப்படி 1947-லேயே 56
புளிய மரங்கள் வளர்க்கப்பட்டு பலனுக்கு வந்து விட்டன. இந்தப்புளியமரங்களெல்லாம் அனுப்பபட்டிஏரியைச்சுற்றிய
மேட்டு பன்டு-களில் இன்றும் ஆண்டுக்கொரு
முறை பலன் தந்து நிழல் பரப்பி வருகின்றன.
நா. வெங்கிடுசாமி நாயுடுவின்
தர்ம சிந்தனையை எண்ணி வியப்பதோடு நிற்காமல், எந்தக்காலத்திலும் எல்லோராலும் மனமார போற்றக்கூடிய
செயலாகக்கருதப்படுகிறது. அவர் புதல்வர் திரு.
அப்பாசாமி நாயுடு, பேரன் திரு. தாமோதரசாமி நாயுடு, கொள்ளுப்பேரன் திரு. ராமமூர்த்தி
என வம்ச வழித்தோன்றல்களுக்கு இந்த தர்ம காரியத்தால்
காலத்துக்கும் புண்ணியமும், போற்றலும் தொடரும். கொள்ளுப்பேரன் மட்டுமே தற்போது உள்ளார்.
திரு. ராமமூர்த்தி தற்போது காரணம்பேட்டையில்
வசிக்கிறார். 56 புளிய மரங்களின் காய்களால் வரும் பலனை நிர்வகிக்கும் உரிமை, அதாவது
புளியங்காய்களில் வரும் வருமானத்தை நிர்வகித்து ஹரிஜன் முதலான ஏழைக்குழந்தைகளுக்கு
ஆண்டு தோறும் கல்விக்கு செலவிடும் பொறுப்பு, எப்படியோ திரு. நா. வெங்கிடுசாமி நாயுடு
வம்சத்திடமிருந்து, வருவாய்துறையினர் கைக்குப்போக, (1.8.76-க்கு முன்பு) நா. வெங்கடுசாமி
நாயுடுவின் தர்ம காரியம் தொடராமல் போனது வருத்தத்திற்குரியது. அவரது குறிக்கோள், அவா
நிறைவேறவில்லை. 56 புளிய மரத்தின் ஆண்டு பலன் ரூ. 50000 (சுமார்) ஏழைக்குழந்தைகளின்
கல்விச்செலவுக்குப்போகாமல், தடம் மாறி ப்போனது வருத்தப்படக்கூடிய விஷயம்.
இதை
ஈடு செய்யும் விதமாக1.8.1976- அன்று பேரன் தாமோதரசாமி நாயுடுவும், சுப்பே கவுண்டரும்,
(வெங்கிட்டாபுரம்) ஒரு ஜாய்ன்ட் அக்கவுண்ட்
கூட்டுறவு விவசாய வங்கி, அனுப்பபட்டியில் ரூ 1619 /- வைப்புத்தொகையாக வைத்து, அதில்
ஆண்டு ஒன்றுக்கு வரும் சொற்ப வட்டியை ஏழைக்குழந்தைகளுக்கு சுதந்திரதினத்தன்று சாக்லெட்
வாங்கத்தான் பயன் படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த தடம் மாறிப்போன புளியங்காய்ஆண்டுப்பலன்
மீட்டெடுக்க, ஹரிஜனம் முதலான ஏழைகள் முயற்சியில் ஈடுபட, அவர்களுக்குள் ஒற்றுமையில்லை.
அவர்களில் படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள், வெளியூரில் தங்கினாலும், தங்கள்
சமூக முன்னேற்றத்தில் அக்கறையில்லாமலும், பிறந்த கிராமத்தை நினைத்துப்பார்க்காமலும்
இருப்பது இன்னும் வருத்தமளிக்கறது என அனுப்பபட்டியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற எண்பது
வயது தாண்டிய திரு. மாசிலாமணி சொல்கிறார். இதையே வெங்கிட்டாபுரம் கூலித்தொழிலாளி திரு.
குமாரசாமி உண்மையென ஆமோதிக்கிறார்.
மேலும் திரு நா. வெங்கிடுசாமி
நாயுடுவின் கொள்ளுப்பேரன் திரு ராமமூர்த்தி கல்வெட்டு தர்ம சாசனப்படி தனது சந்ததியின்
உரிமையை நிலை நாட்ட நீதிமன்றம் செல்வது குறித்து அந்தக்குடும்பத்திற்கும் அக்கறை இல்லை.
இதனால் அனுப்பபட்டி ஹரிஜன் உள்ளிட்ட ஏழைக்குடும்பக்குழந்தைகள் கல்விச்செலவுக்கான இந்த
சலுகையை இழந்து நிற்கின்றனர்.
திரு. நா. வெங்கிடுசாமி நாயுடுவின்
கல்வெட்டு சாசனத்துக்கும், அவருடைய நல்லதொரு சமூக சிந்தனைக்கும் புறம்பாக வருவாய்த்துறையினர் எப்படி செயல் படலாம் என்பது தான்
நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.
காலஞ்சென்ற திரு நா. வெங்கிடுசாமி
நாயுடுவின் தர்மசிந்தனையை புளியமரங்களின் பலன் மூலமாக ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு
உதவ எண்ணிய சீரிய சிந்தனையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. தற்போது இந்த தர்ம சிந்தனை
வேறு கிராமங்களில், ஊர்களில் தொடருகிறதா எனத் தேடிப்பார்க்க வேண்டும்.
சின்ன
சாத்தன்
23.08.2016
No comments:
Post a Comment