யாத்திரையில் காணுயிர் TRAVEL- wild life
ஹனுமார் லாங்கூர் (Hanumar longur)
இந்த இனக்குரங்கை விசாகப்பட்டிணம்
விரைவு ரயிலில் வரும் போது காலை வேளையில் அறுவடை செய்த நெல் வயிலில் பாய்ந்து ஓடியது
என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிறகு புவனேஷ்வரில் உள்ள கந்தகிரி ஜைனத்துறவிகள் குகை
வளாகத்துக்குள் பார்த்தேன். இவை பெண் வாங்கூரிடம் சிலசமயம் சண்டையிட்டு குட்டிக்குரங்கைப்பிடுங்கிக்கொன்று
விடும்.
![]() |
நண்பர் வஜ்ரவேலு வின்டர் ஸ்கேட்டுடன்-கொனார்க் |
வின்டர் ஸ்கேட் (Winter skate)
கோனார்க் கடற்கரையில்
ஒரு மீனவ இளைஞன் இந்த வகை மீனைப்பிடித்து கரையில் கிடத்தியிருந்தான். அவன் நீண்ட மெலிதான
கம்பியை கடலுக்குள் கரையிலிருந்தே 200 அடிக்கு விசிறிவிட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தான்.இது
அழிந்து வரும் இனம். மனிதன் அளவுக்கதிகமாக பிடித்ததாலும், வின்டர் ஸ்கேட் முட்டையிடுவது குறைவு மேலும் குஞ்சு
பொரிக்க இரண்டு வருஷங்கள் ஆகும்(endangered species) . இது எப்படி இந்த மீனவக் குப்பத்து
இளைஞனுக்கு மாட்டியது என வியப்பாக இருந்தது.
எரவாடி டால்பின்(Erravaddy
Dolphin)
சிலிக்கா லேக் (Chilika lake) கில் படகில் சென்ற போது
எரவாடி டால்பின்களைப்பார்த்தேன். இவை திமிங்கலத்துக்கு உறவு.
அது போல நீரை உமிலும்.இது கடலும் ஆறும் கலக்கும் இடங்களில்
காணலாம். மீனவர், மீன்களைத்தங்கள் வலையில் விழலைக்க
எரவாடி டால்பின்களை அதன் குரலில் ஒலித்துக் கூப்பிட, அவை வர,
மீன்கள் வலைக்குள்ளே வீழும். இவைகளைப்பழக்கி கண்காட்சி
நடத்துவர். இவை critically endangered species.